ஈ.எச்.ஜீ.டொபி (ஆங்கில மூலம்), சோ.செல்வநாயகம் (தமிழாக்கம்). கொழும்பு 3: இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 1970. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
xviii, 496 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 13.5 சமீ.
E.H.G.Dobbyஅவர்களால் எழுதப்பெற்று லண்டன் University of London Press நிறுவனத்தால் வெளியிடப்பெற்ற South East Asia என்ற நூலின் தமிழாக்கம் இது. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் தென்கிழக்காசியாவின் இயற்கைத் தோற்றம் என்ற முதலாவது பகுதியில் தென் கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தோற்றம், தென் கிழக்கு ஆசியாவின் காலநிலைக் காரணிகள், தென் கிழக்கு ஆசியாவின் வடிகால் அமைப்பு, தென் கிழக்கு ஆசியாவின் இயற்கைத் தாவரம், தென் கிழக்கு ஆசியாவின் மண் வகைகள் ஆகிய அத்தியாயங்களும், தென் கிழக்கு ஆசிய நாடுகள் என்ற இரண்டாம் பகுதியில் மலாயாவின் இயற்கை நிலத் தோற்றம், மலாயாவின் பண்பாட்டியல்புகள், மலாயாவின் சமூகப் புவியியல், பேர்மாவின் இயற்கை நிலத் தோற்றம், பேர்மாவின் பண்பாட்டு நிலத் தோற்றம், பேர்மாவின் சமூகப் புவியியல், கிழக்கு இந்தியத் தீவுகள்: மேற்குத் தீவுகள்- சுமாத்திரா, கிழக்கு இந்தியத் தீவுகள்: மேற்குத் தீவுத் தொடர்-யாவாவின் இயற்கைத் தோற்றம், கிழக்கு இந்தியத் தீவுகள்: மேற்குத் தீவுத் தொடர்-யாவாவின் பண்பாட்டு சமூகவியல்புகள், கிழக்கு இந்தியத் தீவுகள்: மேற்குத் தீவுத் தொடர்-போணியோ, கிழக்கு இந்தியத் தீவுகள்: செலிபீஸ், பாலி, லொம்பொக், தீமோர், மேற்கு ஈரியான், தைலாந்தின் இயற்கைத் தோற்றம், தைலாந்தின் பண்பாட்டுச் சமூக நிலைமைகள், இந்தோ-சீனாவின் இயற்கைத் தோற்றமும் பிரிவுகளும், இந்தோசீனாவின் பண்பாட்டுச் சமூக நிலைமைகள், பிலிப்பைன் தீவுகள் ஆகிய அத்தியாயங்களும், மூன்றாவது பிரிவான தென்கிழக்கு ஆசியாவின் மக்கட் புவியியல் என்ற பகுதியில் தென் கிழக்கு ஆசியாவிற் பயிர்ச்செய்கை, தென் கிழக்கு ஆசியாவில் மீன்பிடித் தொழில், தென் கிழக்கு ஆசியாவின் கைத்தொழிலும் வியாபாரமும், தென் கிழக்கு ஆசியாவின் மக்கள், அரசியல், எதிர்கால நிலைமை ஆகிய அத்தியாயங்களுமாக மொத்தம் 25 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் டொபி மலாயாப் பல்கலைக்கழகத்திலும் கானா பல்கலைக்கழகக் கல்லூரியிலும் புவியியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். மொழிபெயர்ப்பாளர் சோ.செல்வ நாயகம், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறையைச் சேர்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23533).