சி.அ.யோதிலிங்கம். கொழும்பு 7: விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், இல.3, டொறிங்டன் அவென்யு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5 x 10.5 சமீ.
இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லிம் இனங்களுக்கிடையேயான பிரச்சினை 1833ஆம் ஆண்டிலிருந்து பதிவுசெய்யப்பட்டுவந்துள்ளது. 1948இல் சுதந்திரத்திற்குப் பின்னர் இப்பிரச்சினையின் போக்கு தீவிரமடைந்து வந்துள்ளது. காலக்கிரமத்தில் அரசியல்மயப்படுத்தப்பட்ட இனவாத சிந்தனையால் ஆயுதரீதியான இன விடுதலைப் போராட்டமாக அது எழுச்சிபெற்றமை ஒரு துன்பியல் வரலாறாகும். இந்நூலில் 1833-1990 வரையான காலகட்டத்தில் இடம்பெற்ற இனப்பிரச்சினை தொடர்பான சம்பவங்கள், தீர்வு முயற்சிகள் என்பவற்றை காலவரிசைப்படுத்தப்பட்ட பட்டியலாகச் சிறு குறிப்புகள் வாயிலாக இந்நூலில் ஆசிரியர் பதிவுசெய்திருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25489).