M.A. M. மன்சூர். கொழும்பு 14: மீள்பார்வை வெளியீட்டகம், 63/5 C, Stace Road,1வது பதிப்பு, பெப்ரவரி 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 40 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 955-8226-00-9.
இனப்பிரச்சினை பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டம் என்ன என்ற கருத்தினை இங்கு முன்வைக்க முயற்சி செய்யப்படுகிறது. இதுவொரு வித்தியாசமான சிந்தனை. இலங்கை நாட்டினுள்ளே வாழுகின்ற பல்லினங்கள் குறித்த இஸ்லாமியக் கண்ணோட்டம் யாது என்பதை இந்நூலில் ஆசிரியர் விரிவாக ஆராயவில்லை. பொதுவாக இப்பிரச்சினையை இஸ்லாம் எப்படி நோக்குகிறது, இதன்போது ஒரு முஸ்லீமின் நிலைப்பாடு என்ன என்பதையே கூற முயன்றுள்ளார். இனப் பிரச்சினைகளும் போராட்டங்களும், இஸ்லாத்தில் நாடு, இனம், மொழி, இஸ்லாத்தில் தேசியம், இஸ்லாத்தில் மனிதம், மதச்சார்பின்மையும் இஸ்லாமும், இஸ்லாமிய அரசில் சிறுபான்மையினர், இஸ்லாமியவாதியின் நிலைப்பாடு, போராட்ட ஒழுக்கம், முஸ்லிமை இயக்குவது எது ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21548. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 012196).