கார்த்திகேசு குகபாலன். யாழ்ப்பாணம்: பேராசிரியர் கா.குகபாலன், 26ஃ2, சம்பியன் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
xiii, 336 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 600., அளவு: 22 x 15 சமீ., ISBN: 978-955-38153-0-9.
இந்நூல் தீவகப் பிரதேசத்தின் பொருளாதார, சமூக விழுமியங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. அமைவிடம், பௌதிக நிலை, நிர்வாகக் கட்டமைப்பு, வரலாறு, குடித்தொகைப் பண்புகள், மதமும் மக்களும், பொருளாதார நிலை, கல்வி, அரசியல், போக்குவரத்து, தாம்போதிகளின் போக்குவரத்து, சுற்றுலாத்துறைக்கான வளங்களும் வாய்ப்புக்களும், அபிவிருத்திக்கான உபாயங்கள், பெருமைசேர்த்த பெரியார்கள் ஆகிய 12 இயல்களில் இவ்வாய்வு விரிகின்றது. பேராசிரியர் கா.குகபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்து அண்மையில் ஓய்வுபெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்புகளைப் பூர்த்திசெய்தவர். குடித் தொகைக் கல்வி, குடிப்புள்ளியியல்துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் வெளிவரும் ஆய்விதழ்களில் வெளியிட்டுவருபவர். தீவகம் தொடர்பான மேலும் பல நூல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன.