மணி. திருநாவுக்கரசு முதலியார். சென்னை: மணி. திருநாவுக்கரசு முதலியார், தமிழாசிரியர், சென்னை பச்சையப்பன் கலாசாலை, 1வது பதிப்பு, 1944. (சென்னை: ஜுப்பிட்டர் பப்ளிஷிங் ஹவுஸ்).
(4), 120 பக்கம், சித்திரங்கள், விலை: 0-8-6 அணா, அளவு: 17 x 12 சமீ.
நமது மொழி இயல்பு, பழக்க ஒழுக்கங்கள், நூன்முறைகள் முதலியவற்றையும், தமிழ் அரசர், புலவர், வீரர், மக்கள் முதலானோர் செயல்களையும் சிறுவர்களுக்குச் சிறுவயது முதலே புகட்டும் நோக்குடன் எழுதப்பட்டது. ஆங்காங்கு வினாக் களையும், உள்ளக் கிளர்ச்சியூட்டும் சிறுவர் வினோதக் கதைகளையும், வேடிக்கைக் கவிதைகளையும் சேர்த்திருக்கின்றார். கடவுள், குதிரை, மாணாக்கர், இன்னா பத்து, புகைவண்டி-ஜோர்ஜ் ஸ்டீவன்சன், வேண்டியவாறு கொடுத்த வேந்தன், ஒழுக்கம், உப்புப் பயிர், இனியவை பத்து, உனக்கும் பேபே உன் அப்பனுக்கும் பேபே, மரங்களின் மாண்பு, நன் மரம், ஒரு நியாயாதிபதி, சிற்றுயிர்களின் நற்றுணை, உயிர்களிடத்து அன்பு, புத்தர் பொருளுறை, கூந்தலழகி, தொண்டைமான் இளந்திரையன், வீரத்தாய், பழைய கறுப்பன் கறுப்பனே, விவேக சிந்தாமணி, மன்னனும் மரக்கலக் கள்வனும், குமணன், அவ்வையார் தனிப்பாடல், அரிமா, வருஷம் மாதம் தேதி, பொங்கலோ பொங்கல், நோன்பென்பது கொன்று தின்னாமை, கோநாயும் ஆட்டுக்குட்டியும், முதலுதவி, நவமணிகள், கடிதம் எழுதுதல், செய்யுள் பாடம், குறிப்புரை ஆகிய தலைப்புக்களின் கீழ் பாடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்னர் பாடசாலைகளில் பாடநூலாகப் பயிலப்பட்ட இந்நூல் சென்னை பச்சையப்பன் கலாசாலைத் தமிழாசிரியரான மணி. திருநாவுக்கரசு முதலியார் எழுதியதாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2289).