13A04 – கண்டிராசன் கதை.

சாரல்நாடன். சென்னை 600 098: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-டீ, சிட்கோ இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், 2வது பதிப்பு, நவம்பர் 2012, 1வது பதிப்பு, ஜுன் 2005. (சென்னை 600 014: பாவை பிரின்டர்ஸ், 16(142), ஜானிஜான்கான் சாலை, இராயப்பேட்டை).

(xiii), 48 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 40., அளவு: 21 x 13.5 சமீ., ISBN: 978-81-234-2275-6.

1815இல் முடிவுற்ற கண்டி இராச்சியத்தின் வரலாற்றை இந்நூலில் கூறமுற் பட்டுள்ளார். கண்டி இராச்சியம் வீழ்ச்சியடைந்ததற்கான காரணத்தை இன்றுவரை தீர்க்கமாக அறியமுடியாதுள்ள நிலையில், புலமைத் திறத்துடன் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட ஆவணங்களிலிருந்தும், சிங்களத்திலும் தமிழிலும் வழங்கிவந்த நாட்டார் பாடல்களிலிருந்தும் தகவல்களைச் சேர்த்து சுவையான வரலாற்று நாவல் போல விறுவிறுப்பாக இந்நூலை சாரல்நாடன் படைத்துள்ளார். அறிமுகம், நாயக்கர் வம்சம், விஜயராஜ சிம்மனுக்குப் பிறகு, விக்கிரமராஜசிம்மனின் ஆட்சி, கண்டி மன்னனின் கைது, மன்னர்கள் ஆற்றிய பணிகள் (1747-1782), தமிழ்நாட்டில் கதைவடிவில், கண்டிராசன் எழுத்து வடிவில், நிறைவாக, நூல் எழுதப் பயன்பட்ட ஆதார நூல்கள் ஆகிய 10 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. கண்டிராசன் ஸ்ரீ விக்கிரம இராசசிங்கன் தொடர்பான புகைப்படங்களும், சித்திரங்களும் நூலுக்கு மெருகூட்டுகின்றன. சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இந்நூலை தமது 1ஆவது பதிப்பாகக் குறிப்பிட்டுள்ளது. (முன்னைய பதிப்பிற்கான நூல் தேட்டம் பதிவிலக்கம் 3960).

ஏனைய பதிவுகள்

100 Välmående Avgiftsfri Casino Extra

Content Fördelarna Tillsammans Avgiftsfri Free Spins Utan Insättningskrav Fördelar Med Casino Tillsammans Minimum 150 Kry Såsom Insättning Insättningsbonus Procentuell Extra, Matchad Insättning Avgiftsfri Tillägg Inte

17068 கொழும்புத் தமிழ்ச் சங்கம்: 73ஆவது ஆண்டு அறிக்கை (2014-2015).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: