13A05 – கர்னாடக சங்கீதம்: தரம் 10: வழிகாட்டற் குறிப்புகள்.

கிருஷ்ணவேணி மயில்வாகனம். யாழ்ப்பாணம்: கீதவாஹினி இசைக் கல்லூரி, கொழும்புத்துறை, 3வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1998, 2வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவை பதிப்பகம்).

ix, 116 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 21 x 15 சமீ.

மேல் வகுப்புகளில் இசை கற்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, வட இலங்கைச் சங்கீத சபையினர் நடத்தும் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர் அனைவருக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டியாகின்றது. புதிய பாடத் திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்டுள்ள வழிகாட்டற் குறிப்புகள் இவை. சங்கீதம், நாதம், ஸ்ருதி, ஸ்வரம், பிரக்ருதிஸ்வரம், விக்ருதிஸ்வரம், குறில்ஸ்வரம், நெடில்ஸ்வரம், லகுவின் ஜாதிபேதம், 35 தாளவிளக்கம், திரியாங்கம், ஷடாங்கம், இராகலட்சணம், கரஹரப்பிரியா, தோடி, ஸ்வரஜாதி-லஷணம், வீணை, தம்புரா, லஷணம்-கீதம், ஜதீஸ்வரம், ஜனக ஜன்னிய இராக விளக்கம், முத்துத்தாண்டவர், இந்தியாவின் 7ஆம் 8ஆம் நூற்றாண்டின் கலாசாரப் பின்னணி, சங்கீதக் கலையின் ஆரம்பம், ஸ்வரஸ்தானம், பண்ணிசை, லஷணம்-கல்யாணி, பிலகரி, வர்ணம்- தானவர்ணம், பதவர்ணம், புல்லாங்குழல், பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி, ஆலயங்களும் இசையும், ஆவர்த்தனம், இராக லஷணம் -மாயாமாளவ, கௌளை சங்கராபரணம், மோகனம், நாதஸ்வரம், புரந்தரதாசர், லஷணம்-பதம், நாட்டார் பாடல், செய்முறை விடயங்கள், வினாக்கள்-விடைகள், அரும்பத விளக்கம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30150.

ஏனைய பதிவுகள்