நெடுந்தீவு மகேஷ். யாழ்ப்பாணம்: செ.மகேஷ், 249/1, நாயன்மார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (யாழ்ப்பாணம்: யாழ். பதிப்பகம்).
xvii, 117 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ.
முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்டு சிதைந்து போனதொரு சமூகத்தின் உணர்வுகளையும் அவலங்களையும், அங்கலாய்ப்புகளையும் சமகாலத் தரிசனங்களாக ஒளிவு மறைவின்றி உண்மை இலக்கியங்களாகத் தந்துள்ளார். நெடுந்தீவு மகேஷ். அடிபட்ட மனதின் ஆழப்பதிந்துள்ள வடுக்களின் பிரதிபலிப்புகளாக இத்தொகுதியின் சிறுகதைகள் காணப்படுகின்றன. கூத்து, வாழ்வதற்குப் போராடு, நிஷா அழுகிறாள், பாமாதேவியின் வலம், வாயில்லாப் பிராணி, சாட்சி, மரணமே உன் கூர் எங்கே?, பெற்ற மனங்கள், விளையும் விளைவுகள், ஊமைக் காயங்கள், பிரச்சினை தீர்ந்தது, ஓர் உயிரின் ஓலம், வாழாத வாழ்க்கை, அழுத்தும் துயரங்கள், பாதை மாறும் பயணங்கள், அப்பா, பண்பு தவறிய, இன்னமும் நாட்களாகலாம், ஊமை ஆகிய 19 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.