16715 வேப்பமரமும் பவளம் ஆச்சியும்.

விவேகானந்தனூர் சதீஸ். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 92 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-10-9.

புரிந்தும் புரியாமலும் சுதந்திரம் பறிக்கப்பட்டதொரு புதிய வாழ்வுக்குள் தெண்டித் தள்ளப்பட்டு பதினான்கு ஆண்டுகளை சிறையில் கழித்து வருபவர் இந்நூலாசிரியர். தான் சுற்றத்தில் கண்டு, கேட்டு, பார்த்து, பட்டுணர்ந்த பலதையும் தன் நினைவுச் சேகரத்தில் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருபவர். அவற்றின் நினைவு மீட்டல்களாக இதிலுள்ள சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இந்நூலில் அப்பா எப்ப வருவாரம்மா?, மின்வெட்டு, குமரனும் நலீமும், மரண வாக்குமூலம், எப்போ வி(மு)டியும், அண்ணே பெண்டாட்டி, காலம் கடந்த கௌரவம், தாரமும் தங்கையும், குயில் குடும்பம், ஐந்தைப் பெற்றும் அநாதையாய், வேப்ப மரமும் பவளம் ஆச்சியும் ஆகிய பதினொரு  சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 197ஆவது நூலாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Ultimata Casinon Online 2024

Content Kasino Big Bad Wolf: Ultimat Casinospelen 2022 Alla Casinon Tillsamman Bankid 2024 Populära Speltillverkare Hos Casinon Inte med Svensk person Tillstånd Spelrekommendationer Vi tar

13895 அமரர் கருணைஆனந்தன் அவர்களின் நினைவு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 6: நினைவு மலர்க் குழு, 1வது பதிப்பு, மே 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 164 பக்கம், புகைப்படங்கள், விலை: அன்பளிப்பு,