சு.திருச்சிற்றம்பலவர். சுன்னாகம்: நா.பொன்னையா, வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 4வது பதிப்பு, 1967, 1வது பதிப்பு, 1935. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xii, 196 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 12.5 சமீ.
சமையல் விதிகள், அன்ன வகைகள், பாயச வகைகள், பருப்புச் சமையல் வகைகள், கறி வகைகள், பச்சடி வகைகள், அரையல் வகைகள், வறுவல் வகைகள், பொரியல் வகைகள், மசியல்-புரட்டல் முதலான வகைகள், குழம்பு வகைகள், சாம்பார் வகைகள், புளிச்சாறு- சொதி வகைகள், இரச வகைகள், வடக வகைகள், ஊறுகாய் வகைகள், கூழ் வகைகள், கஞ்சி வகைகள், பான வகைகள், பிரயாணத்துக்குரிய உணவு வகைகள், மாப்பண்ட வகைகள், உப்புமா வகைகள், வடை வகைகள், காரப் பணிகார வகைகள், இனிப்புப் பணிகார வகைகள் என 25 அத்தியாயங்களில் தாவரபோசன சமையல் வகைகள் பற்றியும் அவற்றைத் தயாரிக்கும் முறை பற்றியும் இந்நூலில் தூயதமிழில் எழுதப்பட்டுள்ளது. பொருள் அட்டவணை நூலின் இறுதியில் காணப்படுகின்றது. இந்நூலின் பதிப்புரிமைமதலியார் சு.திருச்செல்வம் அவர்களிடமிருந்து 19.8.1939இல் தம்மால் பெறப்பட்டதாக நா.முத்தையா அவர்களின் குறிப்பும் நூலில் காணப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21612. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 007181.பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 2361)