16745 கானல் நீர் (நாவல்).

சியாமளா யோகேஸ்வரன். யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 271 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 950., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-97823-5-8.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதொரு நாவல். ஆசிரியரின் மூன்றாவது நூல் இது. சுமதி-மாறன் தம்பதியினரின் இரு ஆண் குழந்தைகளுக்குப் பின்னர் செல்லப்பிள்ளையாக அவதரிக்கிறாள் அபிராமி. சுமதி மகளைக் கண்டிப்பதை மாறன் விரும்புவதில்லை. அதனால் பிரச்சினைகள் குடும்பத்தில் வெடிக்கின்றன. பெற்றோரில் ஒருவர் தம் பிள்ளையைக் கண்டிக்க முற்படும்போது மற்றவர் அதனைக் கண்டும் காணாதது போல் இறுக்கமாக நடந்துகொள்வது தான் சிறந்த குழந்தை வளர்ப்பு. இதுவே பிள்ளைகள் தமது தவறை உணர்வதற்கான பாதையைத் திறந்துவிடும். இந்த விடயத்தை ஆசிரியர் நாவலில் பல இடங்களில் வலியுறுத்துகின்றார். சுமதியின் கணவன் அம்னீசியா நோயினால் பாதிக்கப்படுவதும் மனம் தளராது தன் மகளை நன்றாகப்படிக்கவைக்க சுமதி பாடுபடுவதும் கதையை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கின்றது. அபிராமியோ தாயின் கஸ்டத்தைப் புரியாமல் தான்தோன்றித்தனமாக வாழமுற்படுகிறாள். வாழ்வைத் தொலைத்த அவள் இறுதியில் காலம் கடந்து தன் தாயின் மன்னிப்புக்காகவும் அரவணைப்புக்காகவும் ஏங்குகின்றாள். விறுவிறுப்பாக கதை நகர்த்தப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

40 Line Harbors

Blogs Mr bet casino free spins | Online game Have Monopoly People Instruct Position Casino games On the Large Effective Likelihood: Enjoy This type of