16750 சரித்திரம் சாகும் நாள்.

சதுரையூர் சரலியா (இயற்பெயர்: அலியார் நௌபர் அலி). சம்மாந்துறை 4: அலியார் நௌபர் அலி, சல்பியா மன்சில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (கல்லச்சுப் பிரதி).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டுள்ள இந்நூல் ”சரித்திரம் சாகும் நாள்” என்ற குறுநாவலை உள்ளடக்கியிருக்கிறது. வாழ்வின் வேதனையும் சோதனையும், வெற்றியும் அவரது கதைக்குள் பட்டுத் தெறிக்கின்றன. இடையிடையே ஆழமான நாசூக்கான சிந்தனை வெளிப்பாடும் தெரிகின்றது. ஒரு அரசாங்க அதிபரான சப்ரி இக்கதையின் நாயகன். பலரும் அவரை கெட்டவராகக் கருதினாலும் அவரது உள்ளம்  என்னவோ தூய்மையானதாகவே இருக்கின்றது. நல்வாழ்வுக்கு உடல் ஆரோக்கியம் மாத்திரமல்ல, மன ஆரோக்கியமும் அவசியம் என்பதை இந்நாவல் வலியுறுத்துகின்றது. ஆசிரியரின் கன்னி முயற்சி இதுவாகும். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12089).

ஏனைய பதிவுகள்

15539 சிவப்பு இரவுகள்.

காத்தான்குடி றஹீம் (இயற்பெயர்: எச்.எம்.எம்.றஹீம்). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி).  (7), 8-69 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13514 உணவும் ஊட்டமும்-ஆண்டு 8 (சனத்தொகைக் கல்வி மேலதிக வாசிப்பு நூல்).

ஜீ.எம்.கௌதமதாச (மூலம்), ஸ்ரீமதி பி.சிவகுமாரன் (தமிழாக்கம்). கொழும்பு: சனத்தொகைக் கல்விக் குழு, இலங்கைக் கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (6), 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,