16769 போக்காளி (நாவல்).

நவமகன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜீலை 2022. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

680 பக்கம், விலை: இந்திய ரூபா 700.00, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-93-95256-01-8.

ஆயுதப் போராட்டத்தை புற வெளியிலும், பண்பாட்டுப் போராட்டத்தை வதிவிட அக வெளியிலும் நிகழ்த்திப் பார்க்கக்கூடிய ஈழத் தமிழ்ச் சமூகத்தின் மனநலம், இனநலம் சார்ந்த மோதல்களை தர்க்கவெளியில் வைத்து விவாதிக்கும் இந்நாவல், ஈழ-புகலிட-தமிழக வெளிகளில் விடுபட்டிருந்த புதிய உரையாடல்களையும் புரிதல்களையும் கூர்மையாக முன்னெடுக்கின்றது. தெரிந்த வரலாற்றின் திகைப்பான பக்கங்களாய் புலப்பெயர்வு அனுபவங்களும் முப்பது ஆண்டுகளை ஒரு கால இயந்திரமாக (Time Machine) கைக்கொண்டும் மிகை நாடாமல் நேர்மை எழுத்தை முன்வைத்து வசீகரிக்கிறது இந்நாவல். சொந்த மண்ணை இழந்து, கடந்த காலக் காயங்களையும், நிகழ்கால வலிகளையும் சுமந்தபடி அந்நிய மண்ணில் எதிர்காலக் கனவுகளுடன் வாழ்வைக் கடத்திக்கொண்டிருக்கும் எம்மவர்களின் வாழ்வில் தான் கேட்ட, அனுபவித்த இன்பமான அன்றித் துன்பமான முடிவுகளைக் கொண்ட புதினங்களைச் சமூகச் செயல்தளத்தின் நடைமுறையோட்டத்துடன் பாத்திரங்களின் அனுபவ உணர்வுகளை காய்தல் உவத்தலின்றி உரைநடையில் விவரிப்பதன் மூலம் இதனை ஒரு சமூக நாவலாக அமைத்திருக்கிறார். அகராதியில் போக்காளி என்பதன் அர்த்தம் இளமையில் இறந்தவர் என்றோ, உதவாதவன் என்றோ குறிப்பிடப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70019).

ஏனைய பதிவுகள்

Bani gold rush Slot Machine Reali

Content Gold rush Slot Machine: #12 Bonus Ş Ziua Parcelă Fermecat Jackpot Acel Măciucă Lucru Casino Paypal Sloturi Sloturi Online Gratis 2023 Cele Mai Bune