16779 விடியாத இரவு (நாவல்).

ஜீனைதா ஷெரீப். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி). 

xvi, 254 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-955-38432-2-7.

ஆழமான காதலில் கட்டுண்ட வயதான தம்பதியரின் தூய காதல் வாழ்க்கையை இந்நாவல் பேசுகின்றது. ஐம்பது வருடங்களுக்கு மேலாக தாம்பத்திய வாழ்வில் இணைந்து வாழ்ந்து காதல்வயப்பட்டு காதலிலே கட்டுண்டு ஈருடல் ஓருயிராக வாழ்ந்தவர்கள் இத்தம்பதியினர். அவர்களில் ஒருவர் நோய்வாய்ப்படுகிறார். ஓர் உயிர் நோயுற்றபோது மற்ற உயிர் தவிக்கிறது, தளர்கிறது, துவள்கிறது. எந்த எல்லைக்குச் சென்றாவது தனது காதல் நாயகியை காலனின் பிடியிலிருந்து காப்பாற்றிவிட வேண்டுமென்ற வாழ்க்கைப் போராட்டம் தான் இந்தக் கதை.  அமரர் ஜீனைதா ஷெரீப், மொஹமட் ஷெரீப், கச்சி மொஹமட் (15.09.1940 – 03.10.2021) என்ற இயற்பெயரைக் கொண்டவர். அல் நஸார் வித்தியாலயமெனப் பெயர் கொண்ட காத்தான்குடி முதலாம் குறிச்சிப் பாடசாலை, காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்ற இவர், 1958 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியராக நியமனம் பெற்றார். இவர் மட்டக்களப்பில் இயங்கிய நாடகக் குழுவொன்றில் சேர்ந்து பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இவரது மூன்றாம் முறை, சிதைவுகள், சாட்சிகள் இல்லாத சாமத்தில் ஆகியவை தொடர்கதைகளாகத் தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவரால் காட்டில் எறித்த நிலா, ஒவ்வாமுனைக் கடிதங்கள், இது நம்ம சொத்து, ஒரு கிராமத்தின் துயில் கலைகிறது ஆகிய நாவல்கள் இலங்கைத் தேசிய நூலக சேவைகள் சபையின் அனுசரனையுடன் எழுதப்பட்டுள்ளன. இவர் தேசிய ரீதியாகவும் மற்றும் வட கிழக்கு மாகாண ரீதியாகவும் நான்கு சாகித்திய விருதுகள், இலங்கை அரசின் கலாபூசண விருது, இலக்கிய வித்தகர் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2021இல் மறையும் வேளை இவருக்கு வயது 81.

ஏனைய பதிவுகள்

9098 சிவஞான விளக்கம்.

ஸ்ரீமத் ஞானப்பிரகாசத் தம்பிரான். இலங்கை: ஸ்ரீமத் ஞானப்பிரகாசத் தம்பிரான் சுவாமிகள், மெய்கண்டார் ஆதீனம், கொழும்பு, 1வது பதிப்பு, 1974. (கொழும்பு 12: தாளையான் அச்சகம், 115, மெசெஞ்சர் வீதி). vi, 76 பக்கம், விலை:

Jogue uma vez que Caça-níqueis Temáticos

Content Casino Homepage – Tu Bono: você pode olhar aqui Jogos infantilidade Demanda-níquel Aquele abichar apontar vídeo bingo Showball Crazy Pachinko Online Caça-níqueis puerilidade vídeo