16781 விளிம்பில் உலாவுதல்: இலங்கைக் கதைகள்.

ஐயாத்துரை சாந்தன். சென்னை 600011: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (சென்னை 600 033: காருண்யம் கிராப்பிக்ஸ்).

208 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ.

ஈழத்துப் படைப்பாளியான ஐ.சாந்தனின் ஐந்து குறுநாவல்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. ஆரைகள், உறவுகள் ஆயிரம், மனிதர்களும் மனிதர்களும், எழுதப்பட்ட அத்தியாயங்கள், அடையாளம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 இற்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். இவரது முதலாவது சிறுகதை 1966 ஆம் ஆண்டு புரட்டாதி “கலைச்செல்வி” இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது “பார்வைகள்” என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பல சிறுகதைகளின் ஆசிரியர். சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள் என்ற வடிவங்களை வெற்றிகரமாக கையாண்டவர். இனப்பிரச்சனை, போர்க்கால வாழ்வு போன்றவற்றை இரு மொழிகளிலும் கலைப்படைப்புக்களாக்கியவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34572).

ஏனைய பதிவுகள்

17767 குருவிக்கூடு (நாவல்).

கௌசி (இயற்பெயர்: சந்திரகௌரி சிவபாலன்). சென்னை 600 088: வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத்தெரு, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், 1வது பதிப்பு, 2024. (சென்னை 600 032: பத்மாவதி ஆப்செட்). 344 பக்கம், விலை: