16784 ஜினா.

ஷர்மிளா. (இயற்பெயர்: ஜி.நேசமணி). கொழும்பு: ஜனமித்திரன் வெளியீடு, வீரகேசரி பதிப்பகம், தபால் பெட்டி எண் 160, 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் ரோட்).

132 பக்கம், விலை: ரூபா 3.60, அளவு: 17.5×12 சமீ.

ஜினா என்ற விமானப்பணிப்பெண் பல பயங்கர அனுபவங்களைப்பெற்று மீண்டு அராபிய நாட்டுச் செல்வச் சீமான்களது அந்தப்புரத்துச் சம்பவங்களை அம்பலப்படுத்துகின்றாள். முடிவில் குடும்பவாழ்வில் இணைகிறாள். 20ம் நூற்றாண்டுப் பின்பகுதியில் வட ஆபிரிக்க நாடுகளிலும் அரேபிய நாடுகளிலும் செல்வந்தர்களின் பாலியல் வேட்கைகளைக் கூறும் நூல்.

ஏனைய பதிவுகள்