16811 வானமற்ற வெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.

பிரமிள் (மூலம்), கால சுப்ரமணியம் (தொகுப்பாசிரியர்). திருச்சி மாவட்டம்: அடையாளம் வெளியீடு, 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (சென்னை: மணி ஓப்செற்).

248 பக்கம், விலை: இந்திய ரூபா 105., அளவு: 22×14 சமீ., ISBN: 81-7720-033-x.

புதுக்கவிதையின் முன்னோடிகளுள் ஒருவரான பிரமிள் எழுதிய கவிதை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. கவிதைக் கோட்பாடுகள், உத்திகள் முதலியவற்றைப் பேசும் இக் கட்டுரைகள், கவிதை வளம், சுயேச்சா கவிதை, கலைக்கிழவர் பிச்சமூர்த்தி, பாரதி கலை, வள்ளியும் சாட்டர்லீயும், புதுப்பாதை வகுக்கும் கவிஞன், விடுதலைச் சிறகு, வாழ்வுநெறித் திறவுகோல், புகைக்காளான் அனுபவங்கள், புதுவானம், கவித்வம், கவிதையும் மரபும், பிச்சமூர்த்தியின் இலக்கிய ஸ்தானம், தர்சனம், கண்ணாடியுள்ளிருந்து-ஒரு பதில், வானமற்ற வெளி, குழுவும் காலாவதியும், கவிப்பொருளும் சப்தவாதமும், கைப்பிடியளவு கடல்-முன்னுரை, வேலி மீறிய கிளை-முன்னுரை, Tamil Poetry of the Seventies: The Thematic Background, ஊர்த்வ யாத்ரா-முன்னுரை, தடுக்கி விழுந்த நெடும்பயணம், மேல்நோக்கிய பயணம்-முன்னுரை, மின்னற் பொழுதே தூரம்-முன்னுரை, கருக்களம், உயிர் மீட்சியைத் தொடரும் காற்றின் பாடல், எஸ்ரா பவுண்டின் எதிர்ப்புக் கவிதைகள், லட்சியத்தின் பரிமாணங்கள், உதிரி இலைகள், மர்மப் பாட்டி ஒளவை, அதிரடிக் கவிதைகள் – முன்னுரை, மீன்கள் நடுவில் சில நட்சத்திரங்கள், மேலே சில பறவைகள்-முன்னுரை, காளமேகம் ட்ரிப் ஆகிய 35 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15274 யாழ்/இணுவில் மத்திய கல்லூரி: பவளவிழா மலர் 1930-2005.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: இணுவில் மத்திய கல்லூரி, இணுவில், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). xii, (6), 174 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×21 சமீ.