16813 வீட்டு எண் 38/465.

கவிதா லட்சுமி. சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 24, Shop No B, S.G.P. Naidu Complex, தண்டீஸ்வரம் பஸ் தரிப்பு, பாரதியார் பூங்காவுக்கு எதிராக, வேளச்சேரி பிரதான சாலை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (சென்னை 600 042: யாவரும் பதிப்பகம்).

118 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-92876-57-8.

கவிதா லட்சுமி ஈழத்தின் வடபுலத்தில் குரும்பசிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். பன்னிரண்டாவது வயதில் புலம்பெயர்ந்து தற்பொழுது நோர்வே நாட்டில் வசித்துவருகிறார். கவிதை, இலக்கியம், நடனம், மொழிபெயர்ப்பு, அரங்கியல் என்று பல களங்களில் இயங்குபவர். ஆறு கவிதைத் தொகுப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றை இதுவரை வெளியிட்டுள்ள இவரது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் கவிதா லட்சுமி காக்கைச் சிறகினிலே (தமிழகம்), தாய்வீடு (கனடா) ஆகிய ஊடகங்களில் எழுதிய பன்னிரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. “காலனித்துவம் பெண் யானை” (வேலைப்பணிக்கர் ஒப்பாரி: ஈழத்து இலக்கியத்தை முன்வைத்து ஒரு வரலாற்றுப் பார்வை), “நான்கு படைப்புகளும் ஒரு கேள்வியும்” (ஒரு பேசுபொருள் சார்ந்த லட்சுமி குறும்படமும் பிற மூன்று திரைப்படங்களும் – Lakshmi, The Bridges of Madison County, Roman Holiday, Doll’s House), “வீட்டு எண் 38/465” (தேவதாசி மரபில் வந்த ஒரு நடனக் கலைஞருடனான சந்திப்பு-வாழ்வும் வலிகளும்), “மரபுக் கவிதை-புதுக்கவிதை-பின்நவீன கவிதை” (தமிழ் மரபுவழிக் கவிதைகளில் இருந்து பின்நவீன கவிதைகள் வரையிலான ஓட்டமும் அதன் இயங்குநிலங்கள் மற்றும் இயங்குநிலைகள் பற்றிய பார்வையும்), “வில்லியம் சோமர்செட் மேளஹம் William Somerset Maugham எழுதிய சிறுகதை” (The Colonel’s Lady சிறுகதை கையாண்டிருக்கும் ஆண் பெண் உளவியல்), “The Great Indian Kitchen – இது சமையற் சுமை பற்றியதல்ல” (மலையாளத் திரைப்படம் பற்றிய ஒரு பார்வை), “சிலப்பதிகாரம்: நடனக்கலை மரபும் பதினோராடலின் பரிமாணங்களும்” (சிலப்பதிகாரம் கூறும் நடனக்கலை மரபினை முன்வைத்து பதினோராடலின் பேசுபொருள், ஒழுங்கு, ஆடல் வடிவங்கள், அவற்றின் பரிமாணம், ஒப்பனை முறைமைகள் பற்றிய விபரிப்பு), “ஆடற்கலையும் ஆத்ம தேடலும் சில சிந்தனைகள்” (கலைவடிவம்-கட்டுமானம்-பேசுபொருள்-மனத்தின் தேடல்-வெளிப்பாடு), “போரைப் பேசுதல்: ஒஸ்லோவில் திறந்தவெளிக் கண்காட்சி” (இரண்டாம் உலக யுத்தத்தின் மானுட வலிகளின் கதைகளைப் பேசுகின்ற ரோஜா அரண்மனை ஓவியங்கள்), “பாரதி மறந்த ஆசைமுகம்” (பாரதியின் ஆசைமுகம் மறந்து போச்சே கவிதையின் உட்பொருளும் பாரதியைப் புரிந்துகொள்ளலும்), “ஊழிக்கூத்து: உணர்ந்தார்க்குப் பேரனுபவம்” (பிரபஞ்சக் கூத்தினை காட்சிகளாகக் கண்ட பாரதியின் பரவசநிலைக் கவிதையை புரிந்துகொள்கின்ற ஒரு முயற்சி), “ஞானரதம்” (வாழ்வின் உன்னத கணமொன்றைத் தேடியலையும் உயிர்! பெரிதினும் பெரிதாய்ப் பிறந்த பெருங்கனவு!!) ஆகிய பன்னிரண்டு கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது.

ஏனைய பதிவுகள்

Mr Bet On-line casino NZ Review 2024

Articles Other Mr Wager Casino Incentives Can i claim a no-deposit bonus with my portable? Mr Bet Cellular Player problems with confirmation. Closed membership withheld