13A16 – திருவாதவூரடிகள் புராணம்.

கடவுள் மாமுனிவர் ( மூலம்), ம.க.வேற்பிள்ளை (விருத்தியுரை). ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை (பதவுரை). யாழ்ப்பாணம்: சி.சி.சண்முகம்பிள்ளை, அதிபர், சண்முகநாதன் புத்தகசாலை, வண்ணார்பண்ணை, 3வது பதிப்பு, ஆடி 1931, 1வது பதிப்பு, 1895, 2வது பதிப்பு, 1915. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத யந்திரசாலை).

iv, 156 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 20.5 x 14.5 சமீ

இந்நூலின் முதற் பதிப்பு 1895இல் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் தந்தையாரும், சிதம்பரத்திலுள்ள நாவலர் கலாசாலைத் தலைமையாசிரியருமாயிருந்த ம.க.வேற்பிள்ளையினால் எழுதி வெளியிடப்பட்டது. 1915இல் வண்ணார்பண்ணை எஸ்.எஸ்.சண்முகநாதன் அவர்களது புத்தகசாலையின் வாயிலாக இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. இவ்விரண்டாம் பதிப்பு, அக்காலத்தில் தமிழகத்தில் வழக்கிலிருந்த பல்வேறு திருவாதவூரடிகள் புராண நூல்களிலும், உரைகளிலும் இருந்த பாடபேதங்கள், விபரீத உரைகள் என்பவற்றைக் கண்டித்தும் முன்னைய பதிப்பைப் புதுக்கியும் வழங்கியிருந்தது. இரண்டாம் பதிப்பின் மீள்பதிப்பே இந்நூலாகும். இது சிறப்புப்பாயிரம், உரைப்பாயிரம், பாயிரம், மந்திரிச் சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச் சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற சருக்கம் ஆகிய இயல்களில் விரித்து எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2441. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 11229).

ஏனைய பதிவுகள்

12319 – சனத்தொகையும் குடும்ப வாழ்க்கைக் கல்வியும்: ஆசிரியர் ஆலோசகர்களுக்கான கைந்நூல்.

K.T.கனகரத்தினம் (பதிப்பாசிரியர்). மஹரகம: சனத்தொகையும் குடும்ப வாழ்க்கைக் கல்விக்கான செயற்றிட்ட வெளியீடு, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி, தெகிவளை). 80