க.குணராஜா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 7வது பதிப்பு, ஓகஸ்ட் 2002, 1வது பதிப்பு, ஏப்ரல் 1965. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை).
88 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 120., அளவு: 21 x 14 சமீ.
Projection எனப்படும் எறியங்கள், படவரைகலையில் பயன்படுத்தப்படும் வகை முறைகளை இந்நூல் விளக்குகின்றது. எறியங்கள், உச்சியெறியங்கள், கூம்பெறியங் கள், உருளையெறியங்கள், எறியங்களைத் தெரிவுசெய்தல் ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர) வகுப்பு மாணவர்களுக்கும் பொதுக்கலைத்தேர்வு மாணவர்களுக்கும் பயன்படக்கூடியளவு இந்நூலை ஆசிரியர் ஆக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30173. முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9853).