13A21 – 10ம் 11ம் தரம் கட்டுரை மஞ்சரி: சிறப்புச் சித்திக்குச் சிறந்த துணை.

சு.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: சு.வேலுப்பிள்ளை, நாவற்குழி, பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

208 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21 x14 சமீ.

நல்ல கட்டுரைகள் எழுதும் ஆற்றலை மாணவரிடையே வளர்க்கும் நோக்குடன் ஆசிரியர் சு.வே. எழுதிய 50 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மாணவர் பொருளை மனதிலே நிறுத்திச் சிந்தித்தற்கேற்ற வகையில் பொருள்பற்றிய குறிப்புகள் கட்டுரையின் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ளன. வரலாறு, விளக்கம், சிந்தனை, வர்ணனை, சொல்லோவியம், மேடைப்பேச்சு, கற்பனை, விமர்சனம், பத்திரிகைக் கட்டுரை, வானொலி நாடக விமர்சனம், தற்சார்புக் கட்டுரை, உரையாடல், சிறுகதை, சுயசரிதை ஆகிய பண்புகளைக் கொண்ட தனித்தனிக் கட்டுரைகள் இவை. இந்நூலின் பல பதிப்புக்கள் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ளன. எவற்றிலும் ஆண்டு விபரம் உள்ளிட்ட முக்கிய நூலியல் விபரங்கள் தரப்படவில்லை. பதிப்புகளுக்கிடையே புதிய கட்டுரைகள் செருகப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29860. முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 8713, 9745, 10A12).

ஏனைய பதிவுகள்

Online Slots

Content 50 Free Spins No Depin Casino 2024 – Welches Ist Das Online Casino Mit Den Besten Gratis Casino Spielen? Wie Man Einen Online Casino

15079 மாயை பற்றிய தத்துவக் கதைகள்.

கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், பிள்ளையார் கோயிலடி, கோப்பாய் மத்தி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). vii, 76 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: