13A30 – யாழ்ப்பாண இராச்சியம்.

சி.க.சிற்றம்பலம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், முதுநிலைப் பேராசிரியர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 2வது பதிப்பு, 2006, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½, டாம் வீதி).

xvi, 336 பக்கம், 20 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

கி.பி. 16ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் (கி.பி.1505) போர்த்துக்கேயர் ஈழத்திற்கு வந்தபோது இங்கே மூன்று அரசுகள் காணப்பட்டன. அவை யாழ்ப்பாணம், கோட்டை, கண்டி அரசுகள் எனப் பெயர்பெற்றிருந்தன. கோட்டை, கண்டி அரசுகளைப் போலன்றி யாழ்ப்பாண அரசுக்கு நீண்டதொரு அரசியற் பின்னணி முன்னைய பதிவுகள் பின்னிணைப்பு 584 நூல் தேட்டம் – தொகுதி 13 இருந்தது. கி.பி.13ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதிகளில் எழுச்சிபெற்ற இவ்வரசு கி.பி.17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.பி.1619) போர்த்துக்கேயரிடம் போர் முனையில் தன் சுதந்திரத்தை இழந்தது. இக்காலப்பகுதிக்குரிய இவ்வரசின் வரலாறு இந்நூலின் கருப்பொருளாகின்றது. வரலாற்று அறிமுகம் (சி.க.சிற்றம்பலம்), வரலாற்று மூலங்கள் (வி.சிவசாமி), ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (சி.பத்மநாதன்), யாழ்ப்பாண மன்னர்களும் போர்த்துக்கேயரும் (திருமதி சோ.கிருஷ்ணகுமார்), தொல்லியற் கருவூலங்கள் (ப.புஷ்பரட்ணம்), ஆட்சிமுறை (சி.பத்மநாதன்), சமூகம் (சி.க.சிற்றம்பலம்), சமயம் (சி.க.சிற்றம்பலம்), பண்பாடு (வி.சிவசாமி), சிற்பம் (செ.கிருஷ்ணராஜா), நாணயம் (சி.பத்மநாதன்) ஆகிய 11 கட்டுரைகளின் வாயிலாக இந்நூல் முழுமைபெற்றுள்ளது. (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 2960).

பதின்மூன்றாம் தொகுதி முற்றிற்று

ஏனைய பதிவுகள்