16816 இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியம் ஒரு வரலாற்று திறனாய்வுநிலை நோக்கு.

தேவகாந்தன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (நாகர்கோயில்: பிரின்ட் பொயின்ட் ஓப்செட் பிரின்டர்ஸ்).

207 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-91093-25-9.

ஈழத்து தமிழ் நாவலின் 135 ஆண்டு கால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இந்நூல் உருவாகியுள்ளது. மேற்கில் ஒரு புத்திலக்கிய வடிவத்தின் தோற்றப்பாடு, நாவல் வடிவச் செழுமையும் அர்த்த வியாபகமும் கொள்ளல், புத்திலக்கிய வடிவத்தின் காவியத் திசை நகர்வு, நாவலை வரவேற்க தீவிலிருந்த மரபுத் தடங்கல், முதல் மூன்று இலங்கைத் தமிழ் நாவல்கள், இலங்கைத் தமிழ் நாவல் வரலாற்றின் கால வகைமைப்பாடு, 1895-1925: மத இலக்கியத் தோற்ற காலம், நாவலாக்கத்தின் வீச்சு குறைந்தது, இலங்கை இடதுசாரியச் சிந்தனை, பல்குணிக் காலம் (1956-1983), புலம்பெயர் இலக்கியம் – வரையறை, தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளின் இலக்கியம், புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள், புலத்தின் படைப்புக்கள், போரிலக்கியம், பரீட்சார்த்த நாவல்கள், நிறைவுரை ஆகிய இயல்களில் இலங்கைத் தமிழ் நாவல் இலக்கியத்தின் வரலாறு பற்றியதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட தேவகாந்தன், 1968இல் ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றியவர். 1984இல் புலம்பெயர்ந்து தமிழகத்தில் வசித்த காலத்தில் “இலக்கு” என்ற சிற்றிதழை நடத்திவந்தார். ”கனவுச்சிறை” உள்ளிட்ட பன்னிரு நாவல்களை எழுதியவர். அத்துடன் இரு குறுநாவல் தொகுப்புகளும், ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் இன்றளவில் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது கனடாவில் வாழ்ந்துவருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Book Of Ra 6 Für nüsse Vortragen

Content Sizzling Hot Gebührenfrei Vortragen Deine Book Of Ra Slots Spielbank Spiele Kostenlos Exklusive Anmeldung Hier Im griff haben Eltern Book Of Ra Echtgeld Aufführen