16837 தாயகக் கனவுகள் : பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்.

அருண்மொழி வர்மன் (இயற்பெயர்: சுதர்சன் ஸ்ரீநிவாசன்). கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1, 1வது பதிப்பு, தை 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xix, 122 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-1-7779375-1-5.

ஈழப்போராட்டம், அது குறித்த நூல்கள், அவற்றின் வாசிப்பு அனுபவங்கள் ஆகிய பரப்புக்களில் அருண்மொழிவர்மன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி இதுவாகும். அவர் கொண்டிருக்கும் சமூக அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் அவற்றைத் தெளிவாகவும் தர்க்க நேர்த்தியுடனும் அணுகுபவையாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. தாயகக் கனவுகள், The Cage-I முன்வைத்து ஈழப்போர்: எனது வாசிப்புகளூடான ஒரு பார்வை, எனது பார்வையில் “கொலை நிலம்”, “பெயரிடாத நட்சத்திரங்கள்” தொகுப்பை முன்வைத்து ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள், ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள், “நாம் தமிழர் கட்சி ஆவணம்” தொடர்பாக சில கருத்துக்கள், நாம் தமிழர் கட்சி ஆவணம்: ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளப்போகும் ஆகப் பெரிய சவால், புஷ்பராணியின் “அகாலம்”, “சாம்பல் பறவைகள்” குறுநாவலை முன்வைத்து, அகர முதல்வனின் “சாகாள்”: சில குறிப்புகள். வெற்றிச் செல்வியின் ”ஒரு போராளியின் காதலி”, காத்திருப்பு கதை குறித்து, ”நந்திக் கடல் பேசுகிறது” தொகுப்பை முன்வைத்து தமிழ் நதியின் ”பார்த்தீனியம்” நாவல், முள்ளிவாய்க்கால்: நினைவுகூர்தலில் இருந்து அரசியல் செயற்பாடு நோக்கி ஆகிய பதினைந்து கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

А как натаскаться танцевать во дро-покер с нулевой отметки независимо: хозяйничала игры, варианты покера, инструкции а еще примеры

Content Лимиты али башлевые лимитирования пруд в игре Животрепещущие заметки А как выбрать благоприятный гамма-алгоритм обучения Как аллегро надрессироваться танцевать в дро-покер из нулевой отметки