16853 அல்லையூரின் அமரஞானி.

ரவீந்திரன் ஜெயபாலினி, ஜோ. மல்லூரி (தொகுப்பாசிரியர்கள்). பிரான்ஸ்: செல்லத்துரை தவவிநாயகம் நினைவுக் குழு, 1வது பதிப்பு, மே 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).

478 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்சு நாட்டை வாழ்வின் பிற்பகுதியில் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்லத்துரை தவவிநாயகம் அவர்கள் (26.05.1923-10.04.2001) மறைந்தமையை நினைவுகூரும் வகையில் தொகுத்து வழங்கப்பட்ட கவித்துவ எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட நினைவிதழ். கிராமத்தின் தலைமைக்காரராக அல்லைப்பிட்டியில் வலம்வந்த இவர், உடையார் பரம்பரையில் வழிவந்த செல்லத்துரை-சொர்ணம்மா தம்பதியினரின் புத்திரனாவார்.

ஏனைய பதிவுகள்

14370 கலசம் 2009. இதழாசிரியர் குழு.

கொழும்பு: சாந்த கிளேயார் கல்லூரி, இந்து மாணவர் மன்றம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை). 155 பக்கம், புகைப்படங்கள், விலை:குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19 சமீ.