16856 எமது குடும்ப சரிதம் : எண்பது வயது சதாபிஷேகமலர்.

இ.குமாரசாமி சர்மா. யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ இ.குமாரசாமி சர்மா, ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளர், 15, B.A. தம்பி லேன், வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

41+34 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ.

எமது குடும்ப சரிதம், எமது வாழ்க்கை, எமது வாழ்வில் திருமணச் சடங்கு நிகழ்வுகள், கல்யாண ஊஞ்சல் பாடல்கள், கல்யாண நலங்கு பாடல்கள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகிய ஏழு இயல்களில் இம்மலர் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. இதுவரை பேராதனைக் குறிஞ்சிக் குமரன் கோயில், பகவதி மாரியம்மன் கோவில் வரலாறு, நெஞ்சில் நிறைந்தவை, தெய்வீக வாழ்வு, ஞானவைரவர் கோவில் வரலாறு, சங்கீத மகான்களும் எம்மண்ணில் சங்கீதக் கலைஞர்களும், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய நூல்களைத் தொடர்ந்து பிரம்மஸ்ரீ இ.குமாரசாமி சர்மா அவர்கள் தன் குடும்ப வாழ்வை முன்வைத்து எழுதிய நூல் இதுவாகும். இந்நூலில் பிரம்மஸ்ரீ இ.குமாரசாமி சர்மா அவர்களின் குடும்ப வரலாறு, திருமணச் சடங்கு நிகழ்வுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து கல்யாண ஊஞ்சல் பாடல்கள், கல்யாண நலங்கு பாடல்கள் என்பனவும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14416 தமிழியல் தடங்கள்.

அருட்திரு தமிழ்நேசன் அடிகள் (இயற்பெயர்: அருட்திரு பாவிலு கிறிஸ்து நேசரெட்ணம்). மன்னார்: கலையருவி வெளியீடு, சமூகத் தொடர்பு அருட்பணி மையம், மன்னார் மறை மாவட்டம், புனித சூசையப்பர் வீதி, பெற்றா, 1வது பதிப்பு, டிசம்பர்

A real income Casinos 2024

Articles The web Gambling enterprises To quit Casino games Type of A real income Online casino games Casino games You to Pay Real cash Playing