வாசுகி சிவகுமாரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: திருமதி வாசுகி சிவகுமார், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).
229 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-99840-0-4.
யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் (25.1.1962- 13.01.2022) இலங்கை வானொலியிலும், சக்தி வானொலி-தொலைக்காட்சி முதலானவற்றிலும் காத்திரமான பங்களிப்பினை வழங்கிவந்தவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவரது காலத்தில் ஈழத்து எழுத்தாளர்களினதும் புகலிட படைப்பாளிகளினதும் ஆக்கங்களுக்கும் தினமுரசுவில் களம் வழங்கியிருந்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் தோழர் அமீன் எனவும் அறியப்பட்டவர். இவரது மறைவின் ஓராண்டு நிறைவில் இவர் பற்றிய பல்வேறு நண்பர்களின் நாற்பத்தியேழு மனப்பதிவுகளுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.