16880 ஆசிரிய சிகரம் பிலிப் இராமையா: சிகரம் குறித்த சாரல் துளிகள்.

எம்.விஸ்வநாதன், சை.கிங்ஸ்லி கோமஸ் (மலராசிரியர்கள்). நுவரெலியா: எஸ்.தாயுமானவன், இல. 14, செபல் (Chappel)வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 333 பக்கம், ஒளிப்படம்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.

இராகலையைப் பிறப்பிடமாகக் கொண்டு கந்தப்பொல மெதடிஸ்ட் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் இராகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்த திரு. பிலிப் இராமையா அவர்கள் தனது ஆசிரிய மற்றும் சமூகப் பணிக் காலத்தின் பெரும் பகுதியை அப்பிரதேச மாணவர்களதும் சமூகத்தினதும் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புச் செய்துள்ளார். இவர் 23.03.2023 அன்று தனது தொன்னூறாவது அகவையில் காலெடுத்து வைப்பதையும் அவர் மலையகச் சமூகத்திற்கு ஆற்றிய சேவையை கௌரவிக்கும் முகமாகவும் அவர்தம் நண்பர்கள் மற்றும் மாணவர்களின் பெருமுயற்சியினால் இப்பாராட்டு விழா மலர் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் நினைவுகளில், திரு. பிலிப் இராமையாவோடு நேர்காணல், நண்பர்களின் நெஞ்சங்களில், கட்டுரைகள் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. கட்டுரைப் பிரிவில் கல்வி, இலக்கியம், சமூகம், அரசியல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. “கல்விப் பிரிவில்” மலையகமும் மூன்றாம் நிலைக் கல்வியும் (தை.தனராஜ்), புதிய கல்வி நிருவாக மறுசீரமைப்புகளும் மலையகக் கல்வியும் (பொன்.இராமதாஸ்), வெளிநாட்டுக் கற்கைச் சுற்றுலா அனுபவங்களும் யதார்த்தங்களும் (எம்.விஸ்வநாதன்) ஆகிய கட்டுரைகளும், “இலக்கியப் பிரிவில்”, காணி நிலம் (கு.அழகிரிசாமி), மலையகத் தமிழர் நாட்டார் பாடல்கள் காட்டும் வாழ்க்கைக் கோலங்கள் (பீ.மரியதாஸ்), தமிழ் உரைநடையும் பாரதியாரும் (எஸ்.தாயுமானவன்), மலையகப் படைப்பாளிகளுடனான பேராசிரியர் க.கைலாசபதியின் ஊடாட்டங்களும் படைப்பிலக்கியப் பயணங்களும் (வ.செல்வராஜ்), பண்டாரவளை சி.முத்துசங்கரனின் கவிதைகள்- சில குறிப்புகள் (மொழிவரதன்), ஆய்வு முயற்சிகளில் தெளிவத்தை ஜோசப் (அ.லெட்சுமணன்), சமூக அசைவியக்கமும் மலையகச் சிறுகதை இலக்கியமும் (சுகந்தினி புவியரசன்), குறிஞ்சித் தென்னவன் கவிதைகளில் சமுதாய நோக்கு (எம்.விஸ்வநாதன்) ஆகிய கட்டுரைகளும், “சமூகப் பிரிவில்”, நான் கண்ட பாரதி இராமசாமி (பழனிமுத்து ஆறுமுகம்), செலவுக் கடை முறை என்பது வரமா? சாபமா? (விஜயகௌரி பழனியப்பன்), மலையகமும் பெண்களும் (இரா.சிவலிங்கம்), போதைப்பொருள் பாவனையும் சமூகப் பிரச்சினைகளும் (சந்திரலேகா கிங்ஸ்லி), மலையகத்தில் மேம்படுத்தப்படவேண்டிய சிறுவர் நலன் (ஆ.புவியரசன்) ஆகிய கட்டுரைகளும், அரசியல் பிரிவில், நுவரெலியா மாவட்டத்துக்கு மேலதிக பிரதேச செயலகங்கள் அமுல்படுத்தப்படாமை ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் (சிவலிங்கம் சிவகுமாரன்), மலையக மக்களின் போராட்ட வரலாறு (சிவ.இராஜேந்திரன்), பெருந்தோட்டத்துறை சமூகத்தின் வீடு மற்றும் காணி உரிமை (ஏ.சீ.ஆர்.ஜோன்), மலையகம்- நேற்று இன்று நாளை: ஒரு வரலாற்று அரசியல் சமூக நோக்கு (எம்.வாமதேவன்), வீட்டு உரிமையும் காணி உரிமையும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுவது ஏன்? (ஏ.எஸ்.சந்திரபோஸ்), இலங்கையின் இனத்துவக் கட்சிகள்: மலையகத் தமிழ்க் கட்சிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் (எஸ்.கருணாகரன்), மலையகத் தமிழர் இனத்துவ அடையாளமும் அரசியல் தீர்வும் (சிவம் பிரபாகரன்), 1971ஆம் ஆண்டு போராட்டங்களும் இன்றைய ’அரகலய”வும்: ஒரு பார்வை -சிங்கள போராட்டக் கட்டமைப்பில் சாதியப் பின்னணி (சை.கிங்ஸ்லி கோமஸ்) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

10136 தச்சைத் திருப்பதி வரலாறு.

கந்தப்பு ஆனந்தக் குமாரசாமி, நடராசா விநாயகமூர்த்தி (தொகுப்பாசிரியர்கள்). கரவெட்டி: கரவையூர் ஆதவன், 1வது பதிப்பு, 2009.(யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்). viii, 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ. யாழ்ப்பாண மாவட்டத்தில்

Greatest Local casino Programs

Content The brand new Free Ports Zero Install No deposit Zero Subscribe The newest #step 1 Casino Financial App The real deal Currency Gaming Luckyland