16893 திருமுகம் 60 : மணிவிழா மலர் 2021.

சிவமலர் அனந்தசயனன், பரமநாதன் சேயோன், விஜயரகுநாதன் ஸ்ரீவிசாகன். யாழ்ப்பாணம்: செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் பிறந்தநாள் அறநிதியச் சபை, ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை, 1வது பதிப்பு, மே 2021. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

lxii, (9), 198+31 பக்கம், 31 புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×26.5 சமீ.

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாள் நினைவாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களின் காலரீதியான முக்கிய நிகழ்வுகள், சொற்பொழிவுச் சாதனைகள், சிவபூமி அறக்கட்டளையின் வாழ்லுவம் பணியும் ஆறு திருமுருகனின் அர்ப்பணிப்பும், அவர் தெல்லிப்பழை ஸ்ரீ தர்க்காதேவி தேவஸ்தான நிர்வாகசபைத் தலைவர் பணியை ஏற்றபின் ஆறிறிய திருப்பணிகள் என 90 கட்டுரைகளும், புகைப்படங்களும் இம்மலரை அலங்கரித்துள்ளன. செஞ்சொற் செல்வர் கலாநிதி  ஆறு திருமுருகன் அவர்கள்  தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராகவும், சிவபூமி என்ற சிறுவர் மன வளர்ச்சிப் பாடசாலைகள், சிவ பூமி முதியோர் இல்லம், கீரிமலைச் சிவபூமி யாத்திரிகர் மடம், நாவற்குழியில் திருவாசக அரண்மனை, ஆதரவற்ற நாய்களைப் பேணும் காப்பகம் போன்ற பலவேறு அற நிலையங்களை நிறுவி அவற்றைக் கொண்டு நடத்துபவராகவும் இயங்கி வருகிறார். தன் வாழ்வைச் சைவத்துக்கும் அறப் பணிகளுக்காகவும் அர்ப்பணித்துச் செயற்படுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Jaak Casino

Content Safe Gambling | slot sites with Enchanted Garden Popular Casinos Extra Bonuses And Promotions 50 Free Spins This will normally come in the form