16894 எக்ஸைல்.

நோயல் நடேசன். கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (தெகிவளை: T.G.பதிப்பகம்).

xiv, 155 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 22.5×15 சமீ.

ஈழத்துக்கான ஆயுதப் போராட்டம் அதன் ஆரம்ப எத்தனிப்புகளுடன் தீவிரமடைந்த 80களின் முற்பகுதியில் வெவ்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் ஒத்துழைப்பின் மூலமாகத் தமிழ்நாட்டிலே உருவாகிய தமிழர் மருத்துவ நிலையத்திலே தான் பணிபுரிந்த நாட்களிலே இடம்பெற்ற சம்பவங்களினதும், அந்த நாட்களிலே தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களினதும் அடிப்படையில் எழுதப்பட்ட நினைவு மீட்டலாக இந்நூல் அமைகிறது. இயக்கங்களினது ஜனநாயக மறுப்பு அரசியல் காரணமாக அவற்றுடன் பொது நோக்கங்களுக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும், அரசியல் விடுதலையின் பொருட்டும் இணைந்து செயற்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட நம்பிக்கையீனத்தினையும், விரக்தியினையும் இந்த நூல் உணர்வு பூர்வமாக வெளிக்கொண்டு வருகிறது. இது சிவில் யுத்தம் தொடர்பாகத் தமிழர் தரப்பின் மத்தியில் பெரிதும் பேசப்படாத சில பக்கங்களைப் பேசும் ஒரு நூல். செய்திப் பத்திரிகைகளிலும், தமிழ்த் தேசிய கருத்துருவாக்கிகளின் பத்திகளிலும் வெளிவராத சில உண்மைகளையும், நினைவுகளையும், சம்பவங்களையும் இந்தப் புத்தகத்தில் இருந்து நாம் வாசித்தறியக் கூடியதாக இருந்தது. ஆயுதப் போராட்ட காலங்களில் நாடு கடந்த நிலையில் இடம்பெற்ற வன்முறைகள் பற்றி இந்த நூல் பல செய்திகளையும், குறிப்புக்களையும் தாங்கியதாக உள்ளது. தமிழ்த் தேசத்தினை மையமாகக் கொண்ட வன்முறைக்குத் தேசங்கடந்த ஒரு பரிமாணமும் இருக்கிறது என்பதனைச் சொல்லும் ஒரு நூலாக எக்ஸைல் அமைகிறது. எக்ஸைல் 84, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, இலங்கை-இந்தியத் தமிழரை இணைக்கும் சங்கிலி, மகனின் பிறந்தநாள்: மனைவியின் துணிச்சல், சிக்னல் பற்பசை தலையிடி மருந்தாகியது, தமிழக அமைச்சருடன் சந்திப்பு, நாளையை நாளை பார்ப்போம், இந்திரா காந்தியற்ற ஈழ விடுதலை, தமிழர் மருத்துவ நிலையம், உண்மைகள் இரண்டு, வெளிநாட்டுத் தமிழர்களின் உதவிகள், தமிழீழக் கனவுடன் இறுதிவரை வாழ்ந்து மறைந்த டேவிட் ஐயா, அப்பாவிகளைக் கொல்லும் பயங்கரவாதம், இரத்தக் கறை படிந்த அங்கிகள், அந்த மூன்று நாட்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம்-தோற்றம், டொக்டர் பிரமோத்கரன் சேத்தி நினைவுகள், கெடுகுடி சொற்கேளாது, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிடிபட்ட ஆயுதங்கள், மீண்டும் வெளியேறுதல் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Finest Fl Casinos on the internet

Blogs Navigate to this web-site: An educated Possibilities To help you Paypal Local casino Dumps How do i Start with An online Gambling establishment Software?