16904 எஸ்.ரி.ஆர். நினைத்ததை முடித்தவர்: திருப்பணித் தவமணி சி.தியாகராஜா-சாமானியர் ஒருவரின் சாதனைப் பயணம்.

சி.தியாகராஜா (மூலம்), விஜிதா கேதீஸ்வரநாதன், பொ.ஐங்கரநேசன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: திருமதி விஜிதா கேதீஸ்வரநாதன், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (யாழ்ப்பாணம்: மிக்கி பிரின்டிங் ஸ்பெஷலிஸ்ட், தபாற்பெட்டிச் சந்தி, பலாலி வீதி, திருநெல்வேலி).

146 பக்கம், ஒளிப்படங்கள், 8 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18 சமீ.

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரின் உரிமையாளர் எஸ்.ரி.ஆர். அவர்களின் மறைவின் முதலாம் ஆண்டு நினைவாக, தமிழக, ஈழத்துத் தமிழ்ப் பிரமுகர்களின் மலரும் நினைவுகளின் தொகுப்பாக அமையும் இந்நூல் சி.தியாகராஜா அவர்கள் எழுதிய “எண்ணம் போல் வாழ்வு” என்ற சுயசரிதையையும் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. வெற்றிகரமாக தன் வர்த்தக உலகத்தின் சிருஷ்டியான யாழ்ப்பாணத்து வர்த்தகப் பிரமுகர் என்ற வகையில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்றது. எந்தையும் தாயும், துள்ளித் திரிந்த பள்ளிப் பருவம், கற்றுத் தந்த ராஜா கூல்பார், ஆளாக்கிய ராஜா ஸ்னோ ஹவுஸ், ராணி சினிமாவின் தோற்றம், வாங்கிய முதலாவது கார், இசை விழாக் காண மெட்ராஸ் பயணம், இல்லாள் சரஸ்வதி, எனது திரையரங்குகள், யாழ்ப்பாணம் ராஜா, மட்டக்களப்பு சாந்தி, திருகோணமலை சரஸ்வதி, வவுனியா வசந்தி, ராஜா சினிமா-2, சுகந்தி சினிமா 3D, அமுதா சினிமா 3D, எஸ்.ரி.ஆர். பிலிம்ஸ், எம்.ஜி.ஆரும் நானும், எனது அரசியல் ஈடுபாடு, சந்தித்த ஞானிகள், மேற்கொண்ட திருப்பணிகள், மேற்கொண்ட இசைப் பணிகள், நினைப்பது தான் நடக்கும் ஆகிய 16 அத்தியாயங்களில் இவரது சுயசரிதை எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Real cash Japanese Harbors

Blogs Real time Specialist Game Protection and you may Reasonable Play ⚖ Benefits and drawbacks out of $5 Places Nachfolgende Besten Novoline 50 Kostenlose Spins