16908 சுவாமி ஞானப்பிரகாசர் நினைவுநாள் சிறப்புமலர்: 1875-1980.

கிறிஸ்தவ தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை. கொழும்பு 5: கிறிஸ்தவ தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை, எண் 97, ரொரிங்டன் தொடர்மாடி, 1வது பதிப்பு, நவம்பர் 1980. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், 360, பிரதான வீதி).

(16), 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×18.5 சமீ.

கொழும்பு, வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் 01.11.1980 இல் நடைபெற்ற சுவாமி ஞானப்பிரகாசர் நினைவுநாள் முத்தமிழ் விழாவின்போது வெளியிடப்பெற்றது. அருளுரை (யாழ். ஆயர்), ஆசியுரை (தனிநாயகம் அடிகளார்), வாழ்த்துரை (சு.வித்தியானந்தன்), வாழ்த்துகிறேன் வரலாற்று நாயகர்களை (சா.ம.செல்வரட்ணம்), நெஞ்சார நினைக்கிறோம் (சென்பியர் டேமியன்), எமது எண்ணத்திலிருந்து (ப.யே.தேவராசா), சுவாமி ஞானப்பிரகாசரின் நினைவுப்பா (பண்டிதர் ஆசிநாதர்), நினைவில் இருக்கும் நிழல் (சாலை இளந்திரையன்), மறைமலையடிகளின் மடல், பேரறிஞர் ஞானப்பிரகாசரின் பெருந்தமிழ்ப்பணி (பா.வளன் அரசு), முருக வழிபாடு பற்றி நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (வ.அந்தனிஜான் அழகரசன் அடிகள்), ஞானப்பிரகாச மாமணியே (க.த.ஞானப்பிரகாசம்), வீரமாமுனிவர் பிறந்த மூன்றாம் நூற்றாண்டு (தனிநாயகம் அடிகள்), தேமதுரத் தமிழோசை தரணியிற் பரப்பிய தமிழ்த் தூதுவர் தனிநாயக அடிகள் (சு.வித்தியானந்தன்), மொழி மத வளர்ச்சியில் சுவாமி ஞானப்பிரகாசரின் பங்கு (B.P.நியூட்டன்), சுவாமி ஞானப்பிரகாசர் செய்தது தமிழ்த் தொண்டா சமயத் தொண்டா? (எஸ்.ஏ.ஐ.மத்தியூ), தனிநாயகம் என்றும் ஒரு தமிழ்ப் பூங்காற்று (சாலை இளந்திரையன்), சுவாமி ஞானப்பிரகாசர் நினைவுநாள் போட்டி முடிவுகள், மரபுவழி நின்று மாண்புடன் நவில்கிறோம் ஆகிய ஆக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63560).

ஏனைய பதிவுகள்

Fantastic Give Position

Content What is the Rtp To have Wonderful Concert tour? | slot cricket star Ideas on how to Enjoy Golden Concert tour Position? Cards Gametables