16911 அணுவைத் துளைத்து… : இலங்கைத் தமிழ் அணுவிஞ்ஞானியின் சுயசரிதம்.

வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை. கனடா: வேலுப்பிள்ளை இலகுப்பிள்ளை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxxiv, 284 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 2000., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-99622-0-0.

குடும்ப வரலாறு, பாடசாலை நாட்கள், இலங்கையில் உயர் கல்வி, கனடாவில் உயர் கல்வி, காதல் திருமணமும் குடும்ப வாழ்க்கையும், பேராசிரியராக, அணு விஞ்ஞானியாக, கனடாவில் வாழ்க்கையும் சமூக சேவையும், மருந்துசார் துறையில் நாட்டம், கனேடிய அரசியலில் ஈடுபாடு, ஈழமண்ணில் ஈர்ப்பும் மக்கள் சேவையும், பிள்ளைகளின் வாழ்க்கைச் சுவடுகள், நீங்காத குடும்ப நினைவுகள், கமத்தொழிலில் நாட்டம், நிறைவுரை ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் இச்சுயசரிதை விரிந்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள ஆவரங்கால் என்ற விவசாயக் கிராமத்தில் பிறந்து தனது விடா முயற்சியாலும், தளரா நம்பிக்கையாலும் உலகம் போற்றும் அணு விஞ்ஞானியாக உயர்ந்த கலாநிதி இலகுப்பிள்ளையின் உண்மைக்கதை இது.

ஏனைய பதிவுகள்

Tragaperras Gratuito Con Bonus

Content Mejores Tragamonedas Regalado Carente Eximir Siquiera Registrarse Sobre Última Ciencia: garage tragamonedas casino en línea Ventajas Especiales De estas Novedosas Tragaperras Giros Regalado Con