16912 தும்பளை மேற்கு சந்திரப் பரமானந்தர் வம்சம் : சித்த ஆயுர்வேத வைத்தியம், சோதிடம், வானியல் நிபுணத்துவ பரம்பரையினர்.

பா.இரகுவரன். பருத்தித்துறை: தேடல் வெளியீடு, பிராமண வீதி, தும்பளை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (பருத்தித்துறை: விநாயகர் ஓப்செட் அச்சகம்).

xvi, 135 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-97601-0-3.

பருத்தித்துறை நகரத்தின் தென்கிழக்காக அரை கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தும்பளை மேற்கு-கலட்டி என்ற கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் சித்த ஆயர்வேத வைத்தியம், சோதிடம், வானியல் நிபுணத்துவ மரபினர் பற்றி உலகத்திற்கு அறியவைக்க வேண்டிய தேவையின் காரணமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த மரபுகள் இன்றும் தொடர்கின்றன.  இந்த மரபினரும் உறவினர்களும் சந்திரபரமானந்தர் வம்சம் என அழைக்கப்படுகிறார்கள்.  மேற்படி மரபினர் பற்றிய விபரங்களை முழுமையாக அறிய முடியாமல் விட்டாலும் கிடைத்த தகவல்களை இந்நூலில் ஆசிரியர் பதிவுசெய்துள்ளார். இந்நூலில் 24 சித்த ஆயர்வேத மரபினர் பற்றியும் 11 சோதிட மரபினர் பற்றியும், வே.கணபதிப்பிள்ளை, பண்டிதர் க.சச்சிதானந்தன் ஆகிய இரு வானியல் நிபுணர்கள் பற்றியும், வரலாற்றுத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதியில் அனுபந்தமாக திரு. ப.திருஞானசம்பந்தர், திரு. மு.மாணிக்கவாசகர் ஆகியோர் கூறிய மேலதிக தகவல்களும், சித்த ஆயர்வேத மரபுரிமைப் பொருட்கள் சில பற்றிய குறிப்புகளும், பிரம்மஸ்ரீ ச.சுப்பிரமணிய சாஸ்திரிகள் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17743 இனி ஒருபோதும்.

தமிழ்க்கவி. (இயற்பெயர்: திருமதி தமயந்தி சிவசுந்தரலிங்கம்). சென்னை 14: மேன்மை வெளியீடு, 5/2, பெர்தோ தெரு, இராயப்பேட்டை, வி.எம்.தெரு, 1வது பதிப்பு, 2017. (சென்னை 14: கப்பிட்டல் இம்பிரெஷன்). 212 பக்கம், விலை: இந்திய