16922 சிங்கள நாடகக் கலை ஆளுமைகள் (முதலாம் பாகம்).

சாமிநாதன் விமல், பராக்கிரம கிரியெல்ல. ராஜகிரிய: மக்கள் களரி வெளியீடு, 238 ஏ, ராஜகிரிய வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

266 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1837-04-4.

இந்நூல் சிங்கள நாடகக் கலையை அதன் வரலாற்றினை நோக்கிய பார்வையுடன் அறிமுகப்படுத்த எடுக்கும் முயற்சியின் முதல் நடவடிக்கையாக அமைந்துள்ளது. இந்நூலில் 13 இயல்களில் பன்னிரு நாடகக் கலை ஆளுமைகள் பற்றிய வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. “மனமே நாடகத்திற்கு முந்திய சிங்கள நாடக நடைமுறைகள்” என்ற அறிமுகக் கட்டுரை முதலாவதாகவும், தொடர்ந்து பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திர, தம்ம ஜாகொட, எஸ்.கருணாரத்ன, சந்திரசேன தஸநாயக்க, ஹென்றி ஜயசேன, தயாநந்த குணவர்த்தன, குணசேன கலப்பத்தி, சுகதபால டி சில்வா, ஆர்.ஆர்.சமரகோன், பேராசிரியர் சுனந்த மஹேந்திர, காமினி ஹத்தொடுவேகம, பந்துல ஜயவர்த்தன ஆகிய பன்னிரு ஆளுமைகள் பற்றி தனித்தனி இயல்களாகவும் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

9142 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி  பத்து : ப-பௌ.

சி.பத்மநாதன் (பிரதம ஆசிரியர்), க.இரகுபரன், தேவகுமாரி ஹரன் (உதவி ஆசிரியர்கள்), சாந்தி நாவுக்கரசன்; (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்,248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர்

15680 உயிர் சுமந்த கூடு (சிறுகதைகள்).

மலரன்னை. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 116 பக்கம், விலை: ரூபா

17717 வெற்றிச்செல்வியின் சிறுகதைகள்.

வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 294 பக்கம்,