16925 அல்வாயூர்க் கவிஞர் அமரர் மு.செல்லையா அவர்களின் நினைவு மலரும் மாணவர் வெளியீடும்-மீள்பதிப்பு.

வே.த.தணிகாசலம் (தொகுப்பாசிரியர்). அல்வாய்: அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா நிறுவனம், 1வது பதிப்பு, மார்ச் 2019. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன்).

(9),53 + (6), 24 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

அல்வாயூர்க் கவிஞர் அமரர் மு.செல்லையா (07.10.1906-09.12.1966) அவர்கள் ஒரு பண்டிதரும், பிரபல எழுத்தாளருமாவார். இவர் வளர்பிறை, வண்டு விடு தூது ஆகிய நூல்களின் ஆசிரியர். தேவரையாளி சைவ வித்தியாசாலையின் முன்னாள் தலைமை ஆசிரியராகவும், அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலையை உருவாக்கி அதன் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவர் மறைந்த வேளையில் அவரது 31ஆம் நாள் அந்தியேட்டி நிகழ்வின்போது 08.01.1967 அன்று அவரை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்ட இரண்டு நினைவிதழ்களை அவருடைய 52ஆவது நினைவு தினத்தில் அவரது குடும்பத்திரும் அவரது மாணவர்களும் இணைந்து மீள்பதிப்புச் செய்துள்ளனர். குடும்பத்தினரின் நினைவு மலரை அதிபர் வே.த.தணிகாசலம் அவர்களும், மாணவர்களின் வெளியீட்டினை கோ.தர்மகுலசிங்கம் (சமரக்கொடி), க.திருநாவுக்கரசு (காந்தி), தே.ஷேவியர் (நந்தினி சேவியர்) ஆகியோரும் 1967இல் இணைந்து தொகுத்திருந்தனர். இரண்டு நினைவுமலர்களின் வாயிலாகவும் அமரர் மு.செல்லையா அவர்களின் வாழ்வும் பணிகளும் மீளவும் நினைவுகூரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Online Gambling

Content Como Aplaudir Arruíi Superior Cassino jogos Criancice Busca Cassinos Uma vez que Bônus Sem Casa Em 2024 Melhores Novos Cassinos Pressuroso Brasil: Confrontação As