16929 இலக்கியத் தொடுவானை நோக்கி: மு.பொ.பற்றிய ஆவணத்திரட்டு.

மு.பொன்னம்பலம். கொழும்பு 6: மு.பொன்னம்பலம், 36-3/2, ஐ.பீ.சீ.வீதி (சர்வதேச பௌத்த நிலைய I.B.C வீதி), 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xi, 153 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 900., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-97257-5-6.

இருபதுக்கும் அதிகமான நூல்களை எழுதிய மூத்த எழுத்தாளர் மு.பொன்னம்பலம் அவர்களின் படைப்பிலக்கியத்திற்கான ஒர் பருந்துப் பார்வையாக இந்நூல் அமைகின்றது.  பொறியில் அகப்பட்ட தேசம், அது, கவிதையில் துடிக்கும் காலம், குந்திசேத்திரத்தின் குரல், காலி லீலை ஆகிய கவிதை நூல்களுக்கும், கடலும் கரையும், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை, உருமாறும் உலகமும் கருமாறும் காலமும் ஆகிய சிறுகதை நூல்களுக்கும், நோயில் இருத்தல், சங்கிலியன் தரை, ஆகிய நாவல்களுக்கும், காட்டிக் கொடுத்தவன் என்ற நாடக நூலுக்கும், திறனாய்வின் புதிய திசைகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், விசாரம், வாசிப்பதும் வாசிக்கப்படுவதும் ஆகிய இலக்கிய நூல்களுக்கும் சிறுவர் இலக்கியங்களுக்கும் மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் கிடைக்கப்பெற்ற பாராட்டுக்களை உள்ளடக்கியதுடன் இலக்கியப் பயணத்தில் கிடைக்கப் பெற்ற விருதுகள், பாராட்டுக் கடிதங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை புகைப்படங்களுடன் உள்ளடக்கிய ஆவணத் திரட்டாக அமைகின்றது.

ஏனைய பதிவுகள்