16930 என்றென்றும் கைலாசபதி: கட்டுரைகள்.

பால. சுகுமார் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

150 பக்கம், விலை: ரூபா 1100., அளவு: 22×16 சமீ.

பேராசிரியர் கைலாசபதி அவர்கள் இறந்து நாற்பதாண்டுகள் நிறைவடையும் நிலையில் முன்னோடி முயற்சியாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில், என்னுள் வந்த பேராசிரியர் கைலாசபதி (பால.சுகுமார்), குரு தட்சணை: பேராசிரியர் கைலாசபதி நினைவுகள் (சி.மௌனகுரு), பேராசிரியர் க. கைலாசபதியின் படைப்புகள்: ஒரு பார்வை (தம்பு சிவசுப்பிரமணியம்), பேராசிரியர் கைலாசபதியின் பத்திரிகை துறைசார்ந்த பங்களிப்பு (லெனின் மதிவானம்), பேராசிரியர் கைலாசபதி: தமிழ் அறிஞர்களை உருவாக்கிய வித்தகர் (லெனின் மதிவானம்), செ.பொ.கோபிநாத் அவர்களின் இணையப் பக்கத்திலிருந்து, பேராசிரியர் கைலாசபதி: ஒரு மானுட ஆவணம் (பாரதி தீட்சண்யா), தேடிப் படித்த நூல்கள், பேராசிரியர் கைலாசபதியின் நிர்வாகத் திறன் (முருகபூபதி, அவுஸ்திரேலியா), இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி (மு.இளங்கோவன்), பேராசிரியர் கைலாசபதியும் சமூகவியலும் (லஸி குணரத்தினம்), க.கைலாசபதியின் “பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்” ஒரு நோக்கு (கி.பார்த்திபராஜா), பாரதியியலில் கைலாசபதி (ந.இரவீந்திரன்), பாரதியம்: ஆன்மீக நாத்திகம், பேராசிரியர் க.கைலாசபதி நினைவாக (மணியம் சண்முகம்), முற்போக்கு இலக்கிய இயக்கத்தை கடைசிவரை பாதுகாத்த பேராசிரியர் க.கைலாசபதி (மணியம் சண்முகம்) ஆகிய பதினாறு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Slot Demo Komplit

Content Nuts Jack 81 | frozen diamonds slot online casino Seven Gambling establishment 100 percent free Slot Game Da Vinci Expensive diamonds On line Slot