16934 கவிஞர் செல்லையா நாகேந்திரன்: மலர்ந்ததும் உதிர்ந்ததும்.

ஐ.தி.சம்பந்தன் (தொகுப்பாசிரியர்). லண்டன் E7 8PQ : சுடரொளி வெளியீட்டுக் கழகம், 15, Rutland Road, 1வது பதிப்பு, ஜீலை 2004. (லண்டன்: ஜே.ஆர். பிரின்ட், இல. 61, Hoe Street,  Walthamstow, London E17 4QR).

40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21ஒ14.5 சமீ.

இறைபக்தியும் வாழ்க்கையும் கலந்த இலக்கியப் படைப்புக்களை மையமாக வைத்து கவிதை இயற்றி இலண்டன் வாழ் ஈழத்துக் கவிஞர்களிடையே தனக்கெனவோர் இடம்பிடித்திருந்தவர் அமரர் கவிஞர் செல்லையா நாகேந்திரன் (4.6.1946-5.6.2004). யாழ்ப்பாணம், நாவற்;குழியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம்பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்து வந்தவர். அவரது படைப்புக்கள் இடம்பெறாத பத்திரிகைகள், சஞ்சிகைகள், சிறப்புமலர்கள், நினைவஞ்சலி மலர்கள் எதுவுமே இல்லை என்ற அளவுக்கு படைப்புலகத்துறையில் குறிப்பாகத் தமிழ்க் கவிதைத்துறையில் ஆழத்தடம் பதித்தவர். சுடரொளி வெளியீட்டுக்கழகத்தின் நீண்டகால அங்கத்தவராக இருந்துவந்துள்ள அமரர் நாகேந்திரன் அவர்கள், ”வருக தமிழர் பொற்காலம்” என்ற தலைப்பில் அவ்வமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த மில்லெனிய கவிதைப் போட்டியான முதலாவது உலகத் தமிழ் கவிதைப்போட்டியின் அமைப்பாளர்களில் ஒருவராகப் பணியாற்றியவர். இவரின் கவிதைத் திறனைப் பாராட்டி இவரது மறைவுக்குச் சிலகாலத்திற்கு முன்னர் மாமதுரைக் கவிஞர் பேரவை, ”கவியருவி” என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தது. அந்நாரின் மறைவின் 31ஆம் நினைவுதினத்தின் போது பல்வேறு பிரமுகர்களின் அஞ்சலி உரைகளுடன் இம்மலர் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Bonos Carente Tanque

Content Juegos Y Niveles Sobre Lozano Casino Sumérgete En la Galaxia De Bonos De Apollo Casino: Asignación, Giros Sin cargo Y Más profusamente Apuestas Deportivas