16945 ஜீவநதி : மலரன்னை சிறப்பிதழ்: இதழ் 160, கார்த்திகை 2021.

க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, கார்த்திகை 2021. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

48 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 29×20.5 சமீ.

மலரன்னை ஈழத்தின் மூத்த புகழ் பெற்ற எழுத்தாளரான அமரர் கச்சாயில் இரத்தினத்தின் மகள். இவரது இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல்வேறு பத்திரிகைகள், வானொலிகள், சஞ்சிகைகளில் இலங்கை மற்றும் பிற நாடுகளில் பிரசுரமாகியுள்ளன. நாற்பதிற்கும் மேற்பட்ட இவரது வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. “கனவுகள் நனவாகும்” என்ற தொடர் நாடகம் நாற்பத்தி மூன்று அங்கங்களில் ஒலிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. பல வானொலி நிகழ்ச்சிகளையும் இவர் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய பத்து ஆங்கிலக் கவிதைகள் Hot spring என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கின்றன. இவரது நாற்பதிற்கும் மேற்பட்ட ஆக்கங்கள் பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றிருக்கின்றன. நான்கு முறை சர்வதேச அளவில் நடை பெற்ற இலக்கிய போட்டிகளில் சிறுகதை, நாடக எழுத்துருவுக்காக பரிசு பெற்றுள்ளார். சித்திரன், மல்லிகை சிறுகதைப் போட்டிகளிலும் அகில இலங்கை ரீதியில் பரிசு பெற்றுள்ளார். “பாலைவனத்துப் புஸ்பங்கள்” என்ற நாவல் தேசிய கலாச்சாரப் பேரவையின் தேர்வில் இரண்டாம் பரிசுபெற்றது. இலக்கியப் பங்களிப்புக்காக கலைமாமணி, கலைஞானச்சுடர் விருதுகளை பெற்றுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க ஈழத்துப் படைப்பாளியை கௌரவிக்கும் வகையில் சிறப்புற உருவாக்கப்பட்டுள்ள ஜீவநதியின் “மலரன்னை சிறப்பிதழில்”, மலரன்னை ஒரு மனிதநேயப் படைப்பாளி (தாமரைச் செல்வி), மலரன்னையின் புனைவும் அதன் இயங்குதளமும் (சி.ரமேஷ்), எளிமையின் எழுநயமாய் மலரன்னையின் ‘அப்பாவின் தேட்டம்” (இ.சு.முரளிதரன்), தெளிந்த வெண்மை நோக்குள்ள அறம்சார் படைப்பாக்க வெளிப்பாடாக மலரன்னையின் “மலைச்சாரலின் தூவல்” (இ.இராஜேஸ்கண்ணன்), மலரன்னையின் சிறுகதைகள்: ‘கீறல்” தொகுதியை முன்வைத்து (தருமராசா அஜந்தகுமார்), ஊடுருவி ஒளியூட்டும் மலரன்னையின் படைப்புகள் பற்றிய என் குறிப்பு (ஆதிலட்சுமி சிவகுமார்), மலரன்னையின் எழுத்துகளை முன்வைத்து (தாட்சாயணி), சமுதாய யதார்த்தத்தின் பிரதிபலிப்பாய் மலரன்னையின் “காகிதப் படகு” (ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம்), “உயிர் சுமந்த கூடு” கதைகள் பற்றி (ஈழக் கவி), மனத்துயரின் வடுக்களைப் பேசும் மலரன்னையின் “அனலிடைப் புழு” சிறுகதைத் தொகுதி குறித்த பார்வைகள் (புலோலியூர் வேல்நந்தன்), புத்தொளி வீசுகின்ற ”மறையாத சூரியன்” (செ.யோகராசா). தனயனின் பணிதொடரும் அன்னை (வே.கண்ணன்), “வேர் பதிக்கும் விழுதுகள்” சிறுகதைத் தொகுப்பு குறித்தான வாசகர் குறிப்பு (திருஞானசம்பந்தன் லலிதகோபன்), ஒரு போராளியின் தாயின் குரல் (தீபச்செல்வன்), யதார்த்த வாழ்வியலைப் பேசும் படைப்பாக ”மௌனத்தின் சிறகுகள்”(மா.சிவசோதி), மலரவன் (கா.சுஜந்தன்) ஆகிய படைப்பாக்கங்கள் இச்சிறப்பிதழை அழகுபடுத்துகின்றன.

ஏனைய பதிவுகள்

Beste Verbunden Craps Kalkül 2024 2025

Content Welchen Mittelsehne sollte der Crêpes-Maker sehen? The Elder Scrolls Online Das beste Kontaktgrill Wie gleichfalls erstelle selbst das Krypto-Wallet? Idiotischerweise wirkt ihr Schieberegler relativ