16946 ஐரோப்பிய வரலாறு : நாகரிக காலம் முதல் கைத்தொழில் புரட்சி வரை- பாகம் 1.

சி.சூரியதாஸன். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 2வது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 2011,

எை, 278 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 24.5×17 சமீ.

க.பொ.த. உயர்தர, பல்கலைக்கழக மாணவர்களுக்கானது. இந்நூலில் பாடங்கள் கிரேக்க நாகரீகம், உரோம நாகரீகம், கிறீஸ்தவ நாகரீகம், இஸ்லாமிய நாகரீகம், மத்தியகால ஐரோப்பா, மடாலயங்கள், இடைக்கால பல்கலைக்கழகங்கள், மானிய முறை, சிலுவை யுத்தம், மறுமலர்ச்சி, நாடுகாண் பயணம், தேசிய அரசு, கிறீஸ்தவ சமய சீர்திருத்தம், முப்பதாண்டுகால யுத்தம், பிரித்தானியப் பாராளுமன்ற வளர்ச்சி, கைத்தொழிற் புரட்சி, பின்னிணைப்பு என 17 அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சி.சூரியதாசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2007-2011 காலகட்டத்தில் வரலாற்றுத் துறையில் பயின்றவர். பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வு வட்டத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது அரச சேவையில் இணைந்து பணியாற்றுகின்றார். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27300).

ஏனைய பதிவுகள்

12749 – புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா(சுருக்கம்) கலிதொடர் காண்டம்.

புகழேந்திப் புலவர் (மூலம்), வடஇலங்கை தமிழ்நூற் பதிப்பகம் (பதிப்பாசிரியர்கள்).சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1959. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). vi, 98 பக்கம், விலை: ரூபா 1.20, அளவு: 18.5 x