16949 முன்வரலாற்றுக் காலத் தமிழ்நாடு: பேராசிரியர் க.கைலாசபதி நினைவு நூல்.

கா.இந்திரபாலா (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 264 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 850., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-659-655-7.

பதினோர் ஆண்டுகளுக்கு முன் பேராசிரியர் க.கைலாசபதியின் நினைவு நூலாக நுயசடல ர்ளைவழசைஉ வுயஅடை யேனர என்ற நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அதில் அடங்கிய கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு (சிலவற்றில் புதிய தகவல்களுடன்) இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அத்துடன் சில புதிய கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தற்பொழுது கீழடியில் நடைபெறும் அகழ்வாய்வின் தரவுகள் இந்நூலுக்கு மிகவும் முக்கியமானவை. எனினும் அகழ்வாய்வு முற்றுப்பெறுமுன் அவற்றை இங்கே சேர்ப்பது முறையாகாது என்பதால் இந்நூலில் அவை சேர்க்கப்படவில்லை. முன்னுரை, பேராசிரியர் க.கைலாசபதி வாழ்க்கைக் குறிப்பு, ஆகியவற்றுடன் ஆய்வுக் கட்டுரைகளாக பின்வரும் ஒன்பது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அடைப்புக்குறிக்குள் ஆய்வாளரின் பெயர் தரப்பட்டுள்ளது. அறிமுக உரை (கா.இந்திரபாலா), பாணர் தந்த பாடல்கள்: இலக்கிய மூலங்கள் (க.கைலாசபதி), அமணர் அளித்த அருஞ்செல்வம்: கல்வெட்டு மூலங்கள் (கா.இந்திரபாலா), தமிழ் பிராமி எழுத்து (கா.ராஜன்), தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளில் உள்ள ஆட்பெயர்களும் தமிழகத்தின் தொடக்க வரலாறும் (எ.சுப்பராயலு), மக்களும் மொழியும் (கா.இந்திரபாலா), சமுதாய உருவாக்கம்: வெளிப்படும் தோற்றங்கள் (ராதா சம்பகலட்சுமி), சமூகமும் பொருளாதாரமும்: ஒரு மாற்று நோக்கு (கேசவன் வெளுத்தாட்டு), பிராமணரும் யாகங்களும் (வி.சிவசாமி), பிற்சேர்க்கை.  

ஏனைய பதிவுகள்

16865 புத்த(க)ன் : சிதம்பரப்பிள்ளை சிவகுமார் நினைவுக் குறிப்புகள்.

வாசுகி சிவகுமாரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: திருமதி வாசுகி சிவகுமார், 1வது பதிப்பு, ஜனவரி 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை). 229 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-99840-0-4. யாழ்.