16957 உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு.

ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை-1: பகுத்தறிவுப் பாசறை, பவளக்காரத் தெரு, 1வது பதிப்பு, 1948. (மெட்ராஸ்: Free Printers).

54 பக்கம், விலை: ரூபா 0-8-0., அளவு: 19.5×12 சமீ.

“கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் பெரிய மாறுதல்கள் உருவாகின. அக்காலத்துத் தமிழர்களது சமயமும் கொள்கைகளும் பெரிதும் ஆரியச் சார்பு அடைந்தன. இதற்குக் காரணம் தமிழர் கோயில்களை மேற்பார்த்து வந்தவர்களாகிய பார்ப்பார் எனப்பட்ட தமிழ் மக்கள் பிராமண மதத்தைத் தழுவி, சமஸ்கிருத மொழியைத் தமது சமய மொழியெனக் கொண்டமையாகும். இது இன்று கிறிஸ்துவ கத்தோலிக்கராக மாறிய தமிழர் இலத்தீன் மொழியைச் சமய மொழியாகக் கொள்வது போல்வது. பிற்காலத்தில் தமிழ் மக்கள் சிறிது சிறிதாக விழிப்படைந்தமையால் பற்பலர் பொல்லாத ஆரியக் கொள்கைகளை எதிர்க்கத் தொடங்கி வந்தனர். பேராசிரியர் சுந்தரம்பிள்ளை காலம் முதல் தமிழைப் பற்றியும் தமிழ் மொழியைப் பற்றியும் அறிவுசார்ந்து முறையான ஆராய்ச்சி தலையெடுத்தது. அக்காலம் முதல் பல அறிஞர்கள் தமிழர் வரலாற்றுண்மைகளை விளக்கிப் பல கட்டுரைகளை ஆங்கில மொழிகளில் எழுதித் திங்கள் வெளியீடுகளிலும் பிற வெளியீடுகளிலும் வெளியிட்டார்கள்.  அவைகளைத் தக்கமுறையில் தமிழிற்றிருப்பிப் பொது மக்கள் படிப்பதற்கு எவருமுதவவில்லை. அவற்றில் மறைந்து கிடக்கும் அறிஞரின் ஆராய்ச்சி உரைகளை இயன்றவரையில் தமிழ்ப்படுத்தி எமது நூல்களை வெளிட்டுள்ளோம். “உலக நாகரிகத்தில் தமிழ்” என்னும் இச் சிறிய நூல் இலங்கையில் சிறந்த ஆராய்ச்சியாளராயுள்ள திரு. க.பாலசிங்கம் அவர்கள் பல ஆண்டுகளின் முன் ஆசிரியர் கலாசாலை மாணவர் முன்னிலையில் செய்த ஒரு சொற்பொழிவின் சுருக்கமாகும். இக்கட்டுரை இக்கால ஆராய்ச்சி முடிவுகளை மிகத் திருத்தமாகத் தருதல் எவருக்கும் மகிழ்ச்சி அளிக்கத்தக்கது” (ஆசிரியர் முன்னுரையில்). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0600).

ஏனைய பதிவுகள்

Free Vegas Blackjack Practice Game

Content Deposit 5 play with 25 casino casino – Play 17,600+ Free Casino Games No Registration What Is The Legal Age For Playing Online Blackjack