16961 பாதை கூறும் வெள்ளித்தாரகைகள்.

இலங்கை தேசிய சமாதானப் பேரவை. கொழும்பு 6: இலங்கை தேசிய சமாதானப் பேரவை, 12/14, பலபொகுண விகாரை வீதி, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 728 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-1274-96-2.

“ஆனமடுவ அம்மம்மா” முதல் ”குமாரோதய” ஈறாக எழுதப்பட்ட 107 அனுபவக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒரு சொட்டு இரத்தமும் சிந்தாமல் சுதந்திரத்தினை வென்றெடுத்த இலங்கையின் தேசபக்தர்களுக்கு ஆங்கிலேயர்கள் நன்கொடையாக விட்டுச் சென்றது தெற்காசியாவிலேயே சிறந்த பொருளாதாரங்களில் ஒன்றையும் நிறைந்த பொன் இருப்பினைக்கொண்ட மாபெரும் களஞ்சியத்தினையுமே. அன்றிலிருந்து 72 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இந்த நாடும் அதன் மக்களும் உலகத்திற்கு செலுத்திமுடிக்க முடியாத கடன் வலையில் சிக்கியுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்திற்குள் சிங்களவர்களுக்கு எதிரான இரண்டு நீண்ட சிங்களவர்களின் கிளர்ச்சிகளும் சிங்களவர்களுக்கு எதிரான 30 ஆண்டுக்கால தமிழர்களின் கிளர்ச்சியும் உருவாகி, ஒரு பெரிய தேசம் அவரவர்களால் கொல்லப்பட்டது.  இந்த யுத்தத்தில் இடம்பெற்ற கதைகளை விளக்குவதே அந்த சோகமான மனிதர்களின் அனுபவங்களின் இத் தொகுப்பாகும். இவை அனைத்து இனப்பிரிவுகளுக்கும் உரித்தான பல்வேறு சமூக பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுபவங்களாகும். “மா உருண்டை கருத்தடை மாத்திரையாகிச் செய்த கொடுமை”, “காட்டு யானைகளின் தொல்லைகளும் சமய கோஷங்களும்”, “நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக கிராமத்திற்கு அழைத்துவரப்பட்ட என்னுடைய தமிழ் அண்ணி”, “நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகிய சாதிக்கின் மாமா” என்பவை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடத்தக்க சில கதைகளாகும். இத்தொகுப்புக்குக் கைகொடுத்த கதாசிரியர்கள் மத்தியில் அனைத்து இனப்பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள், ஆசிரியர்கள், உட்பட ஆண்கள், பெண்கள் மற்றும் பல்வேறு தொழில்முனைவோரும் அடங்குகின்றனர். அவர்கள் முகம்கொடுத்த பாரிய அழிவுகள் துயரங்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில், எதிர்காலத்தில் இத்தகைய அழிவுகளும் துயரங்களும் ஏற்படாமல் தடுப்பதற்கு செய்யவேண்டியவை தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதுடன் அது தொடர்பாக சமூகம் எவ்வாறு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் விவாதிக்கின்றனர்.

ஏனைய பதிவுகள்

Sparkle NetEnt Slot Comment

Content The Jewel Twist Rtp slot machine | Multipliers Keep An excellent-Video game Able that have Mobile Ports Antique Appeal away from Around three-Reel Ports

14931 சண்- பன்முகப் பதிவுகள்: அதிபர் திரு. வே.சண்முகராஜா: வாழ்த்து மலர்.

மலர்க் குழு. பிலியந்தலை: மலர் வெளியீட்டுக் குழு, நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 114, (18) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: