நாராயணபிள்ளை இடைக்காடர் ஈஸ்வரன். யாழ்ப்பாணம்: வே.இளங்கோ, செயற்பாட்டாளர், இடைக்காடு இணையம், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
90 பக்கம், 24 புகைப்படத் தகடுகள், வரைபடம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×18.5 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலிப் பிரதேசத்தில் உள்ள இடைக்காடு கிராமத்தின் வரலாறும் அங்கு குடியேறிய மக்களின் வாழ்வியலும் பிரதேச அபிவிருத்தியும் பற்றி சுவையான பல தகவல்கள் கொண்ட 58 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வரைபடம், இடைக்காடு-எம் தாயகம், அமைவிடம், வரலாறு, வாவெட்டிமலை, Brief Biography of Late Mr. Saravanamuththu, இடைக்காட்டில் குடியமர்ந்த காலம், வையாபாடல், மாணிக்க இடைக்காடர், இடைக்காடு கிராம உருவாக்கம், அரசின் நிர்வாக நடைமுறைகளின் தோற்றம், தமிழ்நாடும் (இந்தியா) இடைக்காடும், இடைக்காட்டுடன் தொடர்புடைய ஆலயங்கள், தொழில்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, வளர்ச்சிப் பணிகள், ஆலயங்கள், புவனேஸ்வரி அம்மன் ஆலயம், மாணிக்கப் பிள்ளையார் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம், சோதி வைரவர் ஆலயம், காளிதேவி ஆலயம், பெரியதம்பிரான் ஆலயம், கொட்டடி வைரவர் ஆலயம், பெரியநாச்சியார் ஆலயம், இந்திக்கலட்டி வைரவர் ஆலயம், கோணாவளை அன்னமார் நாச்சியார் ஆலயம், புதுச் சந்நிதி ஆலயம், கல்வி- இடைக்காடு மகாவித்தியாலயம், கலை இலக்கிய மன்றம், மாதர் சங்கமும் புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளியும், இடைக்காடு மக்கள் நலன்புரிச் சங்கம், இளையோர் வாழ்வியல்- சனசமூக நிலையங்கள், கலைமகள் சனசமூக நிலையம், மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையம், அரச சேவை, அஞ்சல் அலுவலகம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், சந்தை, கிராமச் செயலகம்-பொதுநோக்கு மண்டபம், மடங்கள், மயானம், இயற்கைக் கிணறு, இடைக்காடு இந்துநெறிக் கழகம், கைலாயர் ஆச்சிரமம், தொல்பொருள் சான்றுகள், மரச்செக்கு, வெதுப்பகம், தனியார் அரிசி ஆலை, அருகிவரும் எம் கலாச்சார லிழுமியங்கள், இடப்பெயர்வும் நாம் இழந்தவையும், நூல்களும் அதனை வெளியிட்டவர்களும், தனியார் அரைக்கும் ஆலைகள், தனியார் வர்த்தக நிலையங்கள், விவசாய இடுபொருள் நிலையங்கள், கல்வியால் உயர்ந்தோர், முதல் வாகன உரிமையாளர், சேவைகள்-வாகனங்கள் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.