16965 ஒரு கிராமத்தின் பக்திநெறிப் பயணம்.

எஸ்.பாலா (இயற்பெயர்: எஸ்.பாலசிங்கம்). இணுவில்: கிராமத்துச் சூரியன் வெளியீட்டகம், தியேட்டர் ஒழுங்கை, இணுவில் கிழக்கு, 1வது பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: Focus அச்சகம்).

170 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-624-98369-0-7.

கிராமத்துச் சூரியன் வெளியீட்டகத்தின் முதலாவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் கோப்பாய் தெற்கு உதயதாரகை சனசமூக நிலையத்தை அண்டிய கிராமத்தினதும் அந்தக் கிராமத்து மக்களினதும்; 1848 இலிருந்து 1970கள் வரையிலான வரலாற்றைப் பதிவுசெய்ய முற்பட்டுள்ளது. இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன் அந்தக் கிராமத்தினது தொழில்வளம், கலாச்சாரப் பண்பாட்டு வாழ்வியல், அந்த வாழ்வின் அடிப்படையிலான இறை நம்பிக்கை என அக்கிராமத்தின் ஒன்றரை நூற்றாண்டுக்கால வரலாறு இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பதிப்புரை, ஆசியுரை, வாழ்த்துரை, அணிந்துரை, முன்னுரை என்னுரை ஆகியவற்றுடன் ஒரு நாட்டின் இதயம் கிராமங்கள், எனக்குள் இந்த நூல், ஆகிய அறிமுகப் பகுதிகளையடுத்து இந்நூலின் அத்தியாயங்கள் ஸ்தல வரலாறு பற்றி, எமது கிராமம், எமது கிராமத்தின் அன்றைய சாதனையாளர்கள், குடிப்பரம்பல், எமது கிராமத்து மக்களின் அன்றைய நிலப்பிரச்சினை, அன்றைய எமது கிராமத்தின் பண்பாட்டு வாழ்வு, எமது மக்களின் பக்தி நெறிப் பயணத்தில் திரு. கணபதி அவர்களும் திரு. கதிரன் அவர்களும், பக்தி நெறிப் பயணத்தில் திரு. கந்தர் அவர்களும் திரு. சோலையர் அவர்களும், தொடரும் பக்தி நெறிப் பயணத்தில் திரு. கந்தர் அவர்களும் திரு. சின்னத்தம்பி அவர்களும், திரு. இராசதுரை அவர்களின் காலம், வைரவர் ஆலயத்தில் திரு. பரராசசிங்கத்தின் (பேபி) வருகை, பரிபாலன சபையின் பராமரிப்பில் வைரவர் ஆலயம், எமது கிராமத்தின் பக்தி நெறிப் பயணத்தில் உருவான இன்றைய தனித் திறனாளர், முடிவுரை என்றவாறாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Cata Níqueis Online Uma vez que Pix

Content Como Funciona Briga Bônus Pressuroso Aparelho? Criando Uma Apreciação Sobre Exemplar Site Criancice Apostas Outros Jogos Grátis Criancice Ativogames Agt Melhores Casinos Temos Arruíi