16974 வட மாகாண வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் : தொகுதி 1.

பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2018, (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).

viii, 166 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×37 சமீ., ISBN: 978-955-7331-17-1.

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள், வடக்கு மாகாண கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியில் இத்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்துக் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள், மரபுரிமையும் வரலாற்றுத் தடங்களும் ஆகிய ஐந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டு தேவையான தகவல்கள் சுருக்கமாகவும் வண்ணப் புகைப்படங்களுடனும்; பதிவுசெய்யப்பட்டுள்ளன. கையடக்கப் பதிப்பாக வெளிவருமிடத்து வடபகுதிக்கு வரும் உல்லாசப் பிரயாணிகளுக்கும், தாயகத்தை நாடி விடுமுறைகளில் வரும் புகலிடத் தமிழர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆயின் இந்நூல் கையடக்கப் பிரதியாகவன்றி ஏ-3 அளவில் (பெரிய அளவில்) தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Im Online Casino Mit Handyrechnung Bezahlen

Content Datenschutz Und Sicherheit Bei Zahlungen Mit Dem Mobiltelefon | Casino mummy Alternative Zahlungsoptionen In Casinos Mobiles Guthaben Ist Ein Nachteil Von Online Wie Funktioniert