16981 காந்தியும் விவேகானந்தரும்.

வெ.சாமிநாதசர்மா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street). 

v, 74 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-685-113-7.

ஓய்வறியா உழைப்பாளியும் கர்மயோகியுமான மஹாத்மா காந்தியையும், துறவாடை அணிந்த துறவியும் ஞானவீரருமான சுவாமி விவேகானந்தரையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட இந்நூலில் தமிழகத்து நுலாசிரியர் வெ.சாமிநாதசர்மா தனக்கேயுரிய அழகிய தமிழ் மொழிநடையில் ஐம்பது வருஷங்களுக்கு முன், இளமையில் இருவரும், இருவரும் மகான்கள், விவேகானந்தர் ஏன் அமெரிக்கா சென்றார்?, காந்தி ஏன் ஒரு விவசாயி?, இரண்டு சக்திகள், மனிதனாயிரு, தொண்டு செய் ஆகிய எட்டு இயல்களில் ஒப்பீடு செய்திருக்கிறார். வெங்களத்தூர் சாமிநாதசர்மா 1895இல் பிறந்தவர். திரு வி.க.வின் நவசக்தி, தேசபக்தன் இதழ்களில்உதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். ஹிட்லர், முசொலினி, மகாத்மா காந்தி, போன்ற பிரமுகர்களின் வரலாறுகளை தமிழில் பாமர மக்களும் படித்தறியும் வகையில் எளிய நடையில் மொழிபெயர்த்து எழுதி வெளியிட்டார். இவ்வாறு சுமார் 75 நூல்கள் வரை இவர் எழுதி இன்றும் நூலகங்களில் இடம்பெற்றுவருகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 70198).

ஏனைய பதிவுகள்

Ersatzteile Für Geldspielautomaten

Content Slot flowers – Informationen Zu Den Einzelnen Spielautomaten Wie Spielregeln Und Gewinnchancen Wie Man An Spielautomaten Online Gewinnt Echtgeld Spielautomaten Flexibilität Der Einsatzmöglichkeiten Automaten