15002 அறிவுக் களஞ்சியம்.

ஏ.ஆர்.எம்.ஜிப்ரி. பாணந்துறை: படி பதிப்பகம், 29/44, பொது சேவா மாவத்தை, சரிக்கா முல்லை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (பேருவளை: பொஸிட்டிவ் கிராப்பிக்ஸ், 175, பழைய வீதி).

xxii, 274 பக்கம், விலை: ரூபா 280.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-97964-0-2.

அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான அமரர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கல்முனையைச் சேர்ந்தவர். கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியராகப் பணியாற்றியவர். களுத்துறை ஜீலான் மத்திய கல்லூரி, தொடவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றில் அதிபராகவும் கடைமயாற்றியவர். இலங்கை வானொலியில் அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம், பாஹிமின் பரவசப் பயணம், அறிவுக் களஞ்சியம் போன்ற நிகழ்ச்சிகளை நடாத்தியவர். நாடுதழுவிய ரீதியில் பொது அறிவு, விஞ்ஞானம் சார்ந்த விடயங்களை போதிப்பவராகவும் இருந்து வந்தார். கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதிலுள்ள தகவல்கள், இஸ்லாம், பொது அறிவு, விஞ்ஞானம், கணிதம், தமிழ், விளையாட்டு ஆகிய தலைப்புகளில் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் பின்னிணைப்பு ஒன்றும் காணப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

Casitabi Online casino Comment

Articles Look these up | Best Cellular Online casinos Around australia 2024 Best step 3 Discover Your absolute best Web based casinos Australia 2024 Really