15023 நமது வரலாற்றை நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும்.

தில்லைநாதன் கோபிநாத். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

140 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-0958-27-6.

இந்த நூலின் ஆசிரியர் தில்லைநாதன் கோபிநாத் ஈழத்து ஆவணமாக்கற் செயற்பாடு களில் 2004 முதல் ஈடுபட்டுவருபவர். நூலக நிறுவனத்தில் அதன் ஆரம்பகாலம் முதல் பங் களித்து வருபவர். கடந்த 16 வருடங்களில் ஆவணவாக்கல் சார்ந்து இவர் எழுதியவற்றில் முக்கியமானவற்றை ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து நூலாகத் தந்துள்ளார். இந்நூலில், நேர்காணல்கள், கட்டுரைகள், முன்மொழிவுகள், கையேடுகள் என நான்கு பிரிவுகள் அடங்கியுள்ளன. எமது ஆவணங்களும் அறிவுத் தொகுதிகளும் மர புரிமைகளும் அழிந்து கொண்டிருப்பதால் ஆவணப்படுத்தலில் அனைவரும் அக்கறை காட்டவேண்டியவர்களாக இருக்கிறோம். எமக்கான ஆவணப்படுத்தலை நாம்தான் செய்ய வேண்டும். வேறு யாரும் செய்யப்போவதில்லை என்ற கருத்தை இதிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் வலியுறுத்துகின்றன.

ஏனைய பதிவுகள்

17233 தன்னுரிமையும் தனியரசும்.

கந்தசாமி பிரதீபன். கனடா: சுதந்திர வேட்கை வெளியீட்டகம்,   1வது பதிப்பு, 2024. (கனடா: அச்சக விபரம் தரப்படவில்லை). xvi, 208 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-1-66641-020-4. எமது விடுதலைப்